202
அன்பொடு புணர்ந்த ஐந்திணை - மருதம்
கொள்கின்ற நாள் என்று எண்ணினர். விரைந்து வந்து பார்த்தனர். இவன் ஆதலை அறிந்து அடியில் சிலம்பு ஒலிக்க அணுகி, உன் கண்ணாலும் நெற்றியாலும் கன்னத்தாலும் உன்னைத் தழுவிய தாயர்க்கு விளக்கத்தைத் தருதலை ஏற்றுக் கொண்டுள்ள அழகிய கையாலும், உன் தந்தைக்கு நீ செய்யும் சிறப்புகள்போல் எமக்கும் சிறப்புகள் செய்து இந்த இரவுக் காலத்தில் எம்முடன் தங்கிப் போக வேண்டும். தலைவா! இதனால் எங்கள் நலத்தின் புதுமையை அனுபவித்துப் பின்பு எங்களை நினைத்துப் பார்க்காத நாணம் இல்லாதவன் செய்த தனிமையையெல்லாம் பெரிதும் போக்குவோம் என்று கூறினர். இவனிடம் ஏற்பட்ட விருப்பத்தால் அமையாத வேற்றுத் தாயர் எதிர்கொள்ள, அதனை மறுக்காத இக் கள்வனாலே அங்குக் காலம் தாழ்க்க நேர்ந்தது. அதுவன்றி யான் வேறோர் தீது உடையவள் அல்லேன். ஒளி பொருந்திய அணியை உடையவளே! என் மீது சினம் கொள்ளாதே!” என்றாள் தோழி.
தலைவி அதைக் கேட்டு மகனை நோக்கி, “ஏடா! அழகுடைய மெத்தென்ற மூங்கில் போன்ற தோளையுடைய உன் தாயர் சூட்டிய மாலையுடன் எம் இல்லத்தில் நீ வருவாயோ, வாராயோ, என்று வெறுத்துச் சொன்னாள். அப் போது அங்குத் தலைவன் வந்தான். அதை அவள் கண்டாள். கண்டு மகன் முன் செய்த கொடுமைக்கு மேலே, எம்மை மனத்தால் இதழ்ந்திருத்தலால் தம் மெய்யில் கிடந்த அழகிய இனிய சொல்லை உடைய நல்ல மகளிர் அணிந்த கலங்களில் வடுவைக் காட்டி மற்ற வடுக்களுடன் தந்தையும் வந்து நிற்பது வெந்த ஒரு புண்ணில் வேல் எறிந்த தன்மையாய் உள்ளது என்று அவனொடு புலந்து பக்கம் இருந்த தலைவன் கேட்பத் தலைவி சொன்னாள்.
241. யானே தவறுடையேன்!
உறு வளி தூக்கும் உயர் சினை மாவின்
நறு வடி ஆர் இற்றவை போல் அழிய, கரந்து யான் அரக்கவும், கை நில்லா வீங்கிச் சுரந்த என் மென் முலைப் பால் பழுதாக - நீ