பக்கம்:அன்பொடு புணர்ந்த ஐந்திணை (மருதம்).pdf/206

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தொகை - வகை - உரை : த. கோவேந்தன்

205


காவல் இல்லாது வேண்டியவண்ணமே நடப்பவனே, நீ எம்மை இகழ்ந்தனைப் பரத்தையர் உனக்கு அணிவித்த கணையாழிகள் யாவை? நான் பார்க்கிறேன்.

அக் கணையாழிகள் நறவம் பூவைக் கண்டாற் போன்ற சிவந்த விரலுக்குப் பொருத்தமான ஆண்சுறா மீன் வடிவம் பொருந்திய ஆழியணை இட்டவளின் எண்ணத்தை அறி வேன். காமன் கொடியான மீனை ஆழியில் பதித்தாற் போன்று வேறொன்றில் அழுத்தி அதை எந் நாளும் அடங் காத பரத்தை குணமுடைய இவன் தந்தையின் மார்பில் பொறியாய் ஏற்றி அடிமையாகக் கொண்டு, அங்கு வருவேன் என்று சொல்கின்ற சொல்லினை எனக்கு அறிவிப்பதற்குச் செய்த ஒரு செயலே எனப் புலந்து அம் மகனுக்குச் சொன்னாள்.

நீயும் அத்தன்மை உடையவனோ? மகனான நீயும் என்னை இகழ்வாயோ? என்று மகனைப் பார்த்துச் சொன்னாள் இத்தகைய இவ் இகழ்ச்சியும் நாமே செய்து கொண்டது எனத் தனக்குள் சொல்லிக் கொண்டாள்.

பின்பு, “என் முன்னால் காணப்படும் இவ் அணிகளைக் கண்டு தலையெடுக்க மாட்டாத என் முன்பு வெந்த புண்ணில் வேல் எறிந்தாற் போல் இஃதொன்று, இவனுடைய தந்தை யின் முன்கைத் தொடி இதனை இவனது கையில் இட்டவர் யார் சொல்?” என்றாள் தலைவி.

அம் மகன் விடை சொல்லவில்லை. “ஏடா! இத் தொடி என்னை ஒழித்தவர்களும் இத் தலைவனுக்கு என்னை ஒழித்த வனப்பை வழிபடும் தன்மையைக் காண்பார்களாக என்று கூறும் தன் அழகை மிகுதிப்படுத்திப் புகழ்ந்தது கொள்பவள் தந்தது. இத்தகைய இகழ்ச்சியும் யாம் செய்து கொண்ட ஒன்று என நெஞ்சோடு கூறிக் கொண்டாள். கூறிக் கொண்டு மகனை நோக்கி, “உன்னை இத் தொடியை அணிந்து கொள்க என்று சொன்னவர் யார்தான்!” என்றாள்.

அவன் அஞ்சினான். அதைக் கண்டு அஞ்சாதே! இதை அணிந்து கொண்டு வந்த நீயும் தவறு உடையவன் இல்லை. உன் கையிலே இந்தத் தொடியை அணிவித்த மலரின் அழகு பொருந்திய மை பூசிய கண்ணையுடைய பரத்தையும் தவறு