தொகை - வகை - உரை : த. கோவேந்தன்
207
நெஞ்சம் பிணித்தல் தொழிலாத் திரிதரும் நுந்தைபால் உண்டி, சில. நுந்தை வாய் மாயச் சூள் தேறி மயங்கு நோய் கைமிக, பூ எழில் உண்கண் பனி பரப்ப, கண் படா ஞாயர்பால் உண்டி, சில. அன்னையோ யாம் எம் மகனைப் பாராட்ட, கதுமெனத் தாம் வந்தார், தம் பாலவரோடு; தம்மை வருக என்றார், யார்கொலோ, ஈங்கு? என்பால் அல் பாராட்டு உவந்தோய் குடி, உண்டித்தை என் பாராட்டைப்பாலோ சில. செருக் குறித்தாரை உவகைக் கூத்தாடும் வரிசைப் பெரும் பாட்டொடு எல்லாம் பருகீத்தை - தண்டுவென்-ஞாயர் மாட்டைப் பால். - கலி 85 மகனே! உன் காலில் உள்ளவை, ஒர் அணிகலன் பொன்னால் வளைத்த இரண்டாய் அமைந்த காற்சரி’ என்ற அணியுடன் பண்ணுதலைத் தான் உறும் பொடிமூடும் தழலால் நிறம் உண்டாக்கப்பட்ட தண்டையாகும்.
உன் இடையில் உடுத்தவை, கைத்தொழிலால் பொலிவு கொண்ட மணிகள் இடையிடை அமைந்த பொன்மணிகளை யுடைய வடம், அதன் மீது அழுக்கற்ற சிவந்த பவள வடம் அவற்றின் மீது உடுத்தின அழகாய்க் கழலும் திரைத்த ஓர் பூந்துகில்
நின் கையில் நண்டின் கண்ணின் இயல்பு பொருந்தப் பல அரும்புத் தொழில் சூழ்ந்த சில திரட்சித் தொழில் விளங்கும் இரண்டாய்ச் சேரும் தொடி
நீ அணிந்தவை, வெட்டா வாள், வெட்டாத மழு ஆகியவை நெருங்கக் கட்டிய இரண்டு பக்கங்களிலும் தங்கிய மழைக்காலத்துத் தம்பலப் பூச்சியின் புள்ளியைப் பெற்ற பவளத்தால் செய்த அழுக்கு இல்லாமல் விளங்கும் காளை வடிவுடைய அணி.
சூடப்பட்டவை, கரிய கடலில் விளைந்த முத்தும் அதனுடனே பல மணிகள் சேரக் கோத்த உருட்சி அமைந்த மூன்று வடம் அதன் மேலே கிடக்கும் நூலினால் சூழ்ந்த