பக்கம்:அன்பொடு புணர்ந்த ஐந்திணை (மருதம்).pdf/209

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

208

அன்பொடு புணர்ந்த ஐந்திணை - மருதம்


வண்டுகள் பொருந்தும் கண்ணிக்குப் பொருந்தும்படியாய் இடையில் கிடக்க அரும்புகள் மலர்ந்த சில நீலத்தினது இதழ் நானும்படியாக நீல மணியால் பண்ணிய வண்டுகளை ஒட்டிய கண்டவர் வியப்படையும் மாலை.

யான் சொன்னவையும் பிறவும் நின் அழகிற்கு மேல் ஓர் அழகாய்ப் பொருந்தும். மென்மையான விரலையுடைய சிறு அடிகள் நடந்து திரிந்ததால் நோகவும் செய்யும். அதைக் கைவிட்டு நீ உருட்டும் திண்மையான தேரின் வளைந்த தாமரை மொட்டைக் கையால் பிடித்து மெத்தென அசைந்த படி என்னிடம் இங்கு வருவாயாக உனக்கு என்று நான் வைத்த பாலை உண்பதற்கு

தலைமீது மேற்கொண்ட இயல்பால், வஞ்சனையை மறைத்து வயப்படுத்தும் செயல் பலவும் வல்ல பாணனைத் து.ாண்டிலாக அனுப்பிப் பரத்தையரை அகப்படுத்திக் கொண்டு, தான் விரும்பின பரத்தையரின் மனம் தன் வய மாக்கு தலைத் தனக்குத் தொழிலாகக் கொண்டு திரியும் உன் தந்தையின் சில பகுதியை - பாலை உண்பாய்.

உன் தந்தை வாயினின்று வெளிப்படும் சூளுறவை மெய் எனத் தெளிந்து பூவின் அழகையுடைய உண்கண் நீர் பரவும் படியாக மயங்கும் நோய் எல்லை மீறலால் அக் கண்கள் துயிலாத உன் தாய்ப் பங்கான சில பகுதியை உண்பாயாக!

வாராத தலைவர் வந்ததை எண்ணி யாம் எம் மகினைப் பாராட்டப் பாணன் முதலியவருடனே தாம் விரைவாய் வந் தார். அம்மா! அவரை இங்கு வருக எனக் கூறியவர் யார்தான்? என் குடியின் பாராட்டுக் கேட்டு மகிழ்ந்தவனே! எனது பால் பங்கை உண்பாயாக! அப்புறம் உள்ளது சிறிது தான் என்றாள் தலைவி.

அவன் உண்ணாமல் போதலால் சினம் கொள்ளக் கருதிய தாய் தன் பிள்ளையாட்டால் மன மகிழ்ச்சி செய்த, அவனை நோக்கி, சினம் கொள்ளக் கருதியவர்களை மகிழ்ச்சி யாகிய கூத்தாட்டுவிக்கும் உன் வேட்கையால் இனி நான் பாராட்டும் பெரிய பாட்டுகளுடன் உன் தாயார்க்குரிய பகுதி யான பாலைக்குடி இதையெல்லாம் உன்னை ஊட்டல் செய் வேன் என்று பாலைக் கூறிட்டு மகனுக்கு ஊட்டினாள் தலைவி.