பக்கம்:அன்பொடு புணர்ந்த ஐந்திணை (மருதம்).pdf/21

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

20

அன்பொடு புணர்ந்த ஐந்திணை - மருதம்


கும் வயலையுடைய ஊரன் நம் தலைவன். அத் தகையவனின் மார்பு ஒருவருக்கே அல்லாது மகளிர் பலர்க்கும் அணிகளை நெகிழச் செய்கின்ற துன்பத்தைத் தருவதாகும்” என்று தலைவியைப் பார்த்துக் கடுமையாகக் கூறினாள்.

26. எம்மும் பிறரும் அறியான்

கரந்தைஅம் செறுவில் துணை துறந்து களவன் வள்ளை மென் கால் அறுக்கும் ஊரன் எம்மும், பிறரும், அறியான்; இன்னன் ஆவது எவன்கொல் - அன்னாய்? - ஐங் 26 தோழி, “கரந்தைக் கொடி படர்ந்த வயல், அதில் நண்டு தன் பெடையைத் துறந்து சென்று வள்ளைக் கொடியின் மென்மையான தண்டை அறுக்கும் இயல்புடைய ஊரன் நம் தலைவன். அவன் எம் இயல்பும் பரத்தையர் இயல்பும் நன்கு அறியாது இவ் இயல்பு உடையவனாய் ஒழுகுதற்குக் காரணம் யாது?’ என்று உரைத்தாள்.

27. வருந்துவது ஏன்? செந்நெல்அம் செறுவில் கதிர் கொண்டு, களவன் தண்ணக மண் அளைச் செல்லும் ஊரற்கு எல் வளை நெகிழச் சாஅய், அல்லல் உழப்பது எவன்கொல் - அன்னாய்? - ஐங் 27 தோழி, “அன்னையே, செந்நெல் விளையும் வயலில் வாழும் நண்டு அந் நெற்கதிரைக் கவர்ந்து கொண்டு குளிர்ந்த வாழும் இடமான தன் மண் வளையில் புகும். இத்தகைய இயல்பு கொண்ட ஊரன் தலைவன். அவன் பொருட்டு நீ நின் வளைகள் நெகிழும் வண்ணம் மெலிந்து வருந்துவது ஏன்? சொல்லுக” என்று தலைமகளைப் பார்த்து வினவினாள். 28. மென்தோள் நிறம் மாறுவது ஏன்? உண்துறை அணங்கு இவள் உறைநோய் ஆயின், தண் சேறு களவன் வரிக்கும் ஊரற்கு ஒண் தொடி நெகிழச் சாஅய், மென் தோள் பசப்பது எவன்கொல் - அன்னாய்? - ஐங் 28