பக்கம்:அன்பொடு புணர்ந்த ஐந்திணை (மருதம்).pdf/211

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

210

அன்பொடு புணர்ந்த ஐந்திணை - மருதம்


குன்ற இறு வரைக் கோண்மா இவர்ந்தாங்கு, தந்தை வியல் மார்பில் பாய்ந்தான் - அறன் இல்லா அன்பிலி பெற்ற மகன். - கலி 86 நெற்றிப் பட்டத்தை உடைய இளைய ஆண் யானையின் கருமையுடைய தலையில் தொங்கும் மூன்று வடம் போல், கையால் செய்யப்பட்ட மூன்றுவடம் மென்மையுடைய தலையில் தொங்கவும் பொன்னால் ஆன மழு வாள் ஆகிய வற்றையுடைய ஒளி பொருந்திய அணியை நனைக்கின்ற அழகிய வாயைக் கண்கலந்த நினை வேட்கை நுகரக் காட்சிக்கு இனிய பவழப் பலகை மேலே செம்பாதி வடிவு வேறோர் யானையை மிகவும் குத்துகின்ற போர்ச் செயலை யுடைய பொன்னால் செய், காவலையுடைய அரணங்களைக் குத்தாத கையால் செய்யப்பட்ட நினது (பொம்மை) யானை யுடனே - நின் அடியில் நிறைந்த தேரையின் வாய் போன்ற வாயையுடைய கிண்கிணி ஒலிக்க, தொடியையுடைய மகளிர் செய் சிறிய வீட்டை அழித்து நடக்கும் என் போர்த் தொழிலையுடைய களிறே மகனே, இங்கு வருக!

தலைமைப் பெரும, நீ உன் தந்தையின் அழகை, ஒத்துள்ளாய். உன் தந்தையின் ஒழுக்க நிலைகளுள் உனக்கு ஒப்பாய் உள்ளவற்றை நான் கூறக் கேட்பாயாக. அவற்றுள் மாறுபாடுடைய பகைவரை வென்று களத்தைக் கொள்ளும் வெற்றிக் குணத்தில் தந்தையைப் போன்றவன் ஆவாய். மற்றுள்ள குணங்களில் யாம் இவனொடு ஒரு மனமாயினோம் என்று எண்ணிய மகளிரை, உன் தந்தை வருத்தி மெலிய விடுவர் அது போன்று நீயும் அவர்களின் தோள் மெலியும்படி விடுத்தலான பரத்தமையை மேற்கொள்ளாதே

பெரும, நுகத்தில் உள்ள பகலாணியைப் போல் ஒரு பக்கத்தைக் கொள்ளாது முறைமை செய்தற்கு - நீதி செலுத்த தற்குச் - சாயாத கோல் செம்மையாய் நிகழ்த்துவதில் நின் தந்தையை ஒத்தவனாய் உள்ளாய். மற்றுள்ள குணங்களில் தன் அமைதிக் குணத்தால் இவன் நம்மைத் தப்பான் என்று எண்ணிய மகளிரைக் காற்று மோதும் மலரைப் போல் அழகு கெடும்படி உன் தந்தை வாட விடுவதைப் போல் வருந்த விடுதலாகிய பரத்தமையைப் போல் ஒழுகாதே