தொகை - வகை - உரை : த. கோவேந்தன்
211
பெரும, தன்னைச் சார்ந்தவர் கெடுதலன்றித் தானே கெடுதல் அறியாத சிறந்த பொருளை விரும்பியவர்க்குக் கொடுக்கும் செயலில் தந்தையைப் போன்றவன் ஆவாய். மற்றக் குணங்களில் காதலையுடைய மென்மையான பார் வையை யுடைய உன் தந்தை வருத்தம் மிக நோக்காது விட்டு விடுதல் போல் நீயும் அவர்கள் நோய்மிக்கு வருந்தும் படி விடுதலான பரத்தமையைக் கொள்ளாதே!
பின்பக்கம் வந்து நின்ற தலைவனைக் கண்டு மகன் சிரித்தான் அவனை நோக்கி, நன்கு மதிக்கப்படும் மகனல்லா தவன் பெற்ற மகன் நல்ல குணங்களாய் இல்லாதவற்றை நீ கைக் கொள்ளாதே!” என்று கூறி “நான் சினக்க, இவன் யாரை நோக்கிச் சிரிக்கின்றான்?” என்று தலைவி எண்ணினாள்; பின் திரும்பிப் பின்பக்கம் நின்ற தலைவனைப் பார்த்தாள். பார்த்து, வராத தலைவன் பின்னே வந்து மறைவாய் நின்று பின்னர் நாம் தெளியும்படி முன் பக்கம் வந்தான் என்றாள்.
அதைக் கேட்ட தலைவன் இங்ஙனம் கொடுமை கூறு வாயாயின், அழகிய அணியையுடையவளே, உனக்குச் செய்யும் வருத்தம் ஒன்றும் இல்லாத என்னிடம் ஒரு தவறு உண்டோ? இவனை உன்னிடம் வைத்துக்கொள்ளாது நான் எடுத்துக் கொள்வதற்கு என்னிடம் தருவாயாக, என்றான். அதைக் கேட்ட மகன் தந்தை மேலே வீழ்ந்தான். அவனைத் தலைவி பார்த்துக் கைவிடப்பட்ட அன்பில்லாதவன் பெற்ற பிள்ளை நான் அவன்மீது விழுந்து வெறுத்து விலக்கவும், நம்மைக் கடந்து, மலையின் அடிப் பகுதியில் அரிமா பாய்ந் தாற் போல் அற மற்ற தந்தையின் மார்பில் பாய்ந்தான் அது கண்டு தலைவி ஊடல் தீர்ந்தாள்.
244. ஊடல் தீர்த்தாள் நெஞ்சுடன் கூறி ஒருஉ நீ எம் கூந்தல் கொள்ளல் யாம் நின்னை வெரூஉதும், கானுங்கடை தெரியிழாய்! செய் தவறு இல்வழி, யாங்குச் சினவுவாய் மெய் பிரிந்து, அன்னவர்மாட்டு? ஏடா! நினக்குத் தவறு உண்டோ? நீ வீடு பெற்றாய் இமைப்பின் இதழ் மறைபு ஆங்கே கெடுதி