214
அன்பொடு புணர்ந்த ஐந்திணை - மருதம்
அதைக் கேட்டுத் தலைவன், “நீ போகும் தொழிலைக் கைவிட்டு இங்கு நின்று உண்மையல்லாத பேதைமைச் சொற்களைச் சொல்ல வேண்டா. உன் பொய்களை மெய் என்று மயங்குபவரிடத்தில் சொல் என்று கூறினாள்.
அதைக் கேட்டத் தலைவன், “ஆராய்ந்து எடுத்த அணியை அணிந்தவளே? உன் கண்ணில் அருள் பார்வை யைப் பெற்றாலன்றி இனி உயிர் வாழ மாட்டாத என்னிடம் உள்ள குறைதான் எது?” என்று வினவினான்.
அதைச் செவியேற்ற தலைவி, இவன் ஒருத்தன் எனத் தன் நெஞ்சுடன் கூறினாள். பின் புள்ளியையுடைய நண்டுகளின் நடையால் உண்டான வடு, நீர் அருகே சேர்ந்து கிடந்தாற் போன்று, பெரிய நகத்தால் பிளந்த வடுக்களும், ஒளியுடைய பற்கள் அழுந்திய வடுக்களும், ஒண்மையான இதழ்கள் வாடிய நின் மாலையும், பரத்தையர் உன்னுடன் வேறுபட்டுச் சினந்து அடிக்கச் சிவந்த மார்பும் குறைகளாய் அமை யாவோ? அமையா என்றால் சொல்” என்றாள்.
“நீ சொல்லும் உடல் வேறுபாடு என்னிடம் உண்டாக அதனை எண்ணிப் பாராதே! அங்ஙனம் எண்ணாதிருத்தல் உனக்குத் தக்கது. அதற்குக் காரணம் என்னவென்றால் அத் தீது என்னிடம் நான் உனக்குத் தெளிவிக்க நீ காணலாம். யான் இனித் தெளிவிப்பேன்’ என்றான் தலைவன்.
இந்தக் கற்புக் காலத்தில் நீ சூள் கூறுவதைக் கொண்டு யாம் எம் மனத்தில் தெளிவோம். அதற்குக் காரணம் கேட்பாய்:
தேரில் ஏறிவரும் சிறப்பில் மயங்கி உன் தீங்கை எண்ணிப் பாராமல் வந்த மாலையை உடைய பரத்தையரின் மாலை உன் மாலையாய் எண்ணி அணிந்து வந்தாய் இந்தப் பிழைக்கு அஞ்சி யாம் ஊடிப் பொருத போரில் கலங்கி இக் கற்புக் காலத்தில் நீ கூறும் மிகப் பொய்யான சூள் வருத்தத்தை செய்யுமானால், பின் அது எங்கள் மேல் அல்லாது யார் மேல் வரும். அவ்வாறு வாராமல் களவுக் காலத்துச் சூள் போல் கெடுமோ நீ கூறுவாய்?” என ஊடல் நீங்கிச் சொன்னாள் தலைவி.