பக்கம்:அன்பொடு புணர்ந்த ஐந்திணை (மருதம்).pdf/216

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தொகை - வகை - உரை : த. கோவேந்தன்

215


246. ஊடலில் தோற்றுப் பயன் காண்போம் யார் இவன்? எம் கூந்தல் கொள்வான்? இதுவும் ஓர் ஊராண்மைக்கு ஒத்த படிறு உடைத்து, எம் மனை வாரல்; நீ வந்தாங்கே மாறு. என் இவை, ஒர் உயிர்ப் புள்ளின் இரு தலையுள் ஒன்று போர் எதிர்ந்தற்றாப் புலவல்? நீ கூறின், என் ஆர் உயிர் நிற்கும் ஆறு யாது? ஏஎ1தெறிந்தேம் யாம்; காயாதி-எல்லாம் வல்-எல்லா பெருங் காட்டுக் கொற்றிக்குப் பேய் தொடித்தாங்கு, வருந்தல் நின் வஞ்சம் உரைத்து. மருந்து இன்று-மன்னவன் சீறின், தவறுஉண்டோ நீ நயந்த இன்னகை தீதோ இலேன். மாண மறந்து உள்ளா நாணிலிக்கு இப் போர் புறம் சாய்ந்து காண்டைப்பாய் நெஞ்சே உறழ்ந்து இவனைப் பொய்ப்ப விடேஎம் என நெருங்கின், தப்பினேன் என்று அடி சேர்தலும் உண்டு. - கலி 89 ‘இவன் யார்? என் கூந்தலைத் தொடுவதற்கு இவன் என்ன தொடர்பு உடையவன்? எனத் தலைவி தன் நெஞ்சுக் குள் சொன்னாள். பின்பு “என் கூந்தலைப் பிடிக்கின்ற இதுவும், நீ சிறிதும் பாதுகாவாது பாதுகாப்பவரைப் போல் எண்ணிக் கொண்டு ஊராளும் தன்மைக்குப் பொருந்திய கொடுமையை உடையது. இதை எண்ணிப் பார். இனி எம் மனைக்கு வராதே. வந்ததைப் போலவே மீண்டு போ” என்று கூறினாள்.

அதைக் கேட்ட தலைவன் உடலும் உயிரும் ஒன்றாய்த் தலை இரண்டாய் உள்ள பறவையின் அந்த இரண்டு தலை களுள் ஒன்று மற்ற தலையுடன் போர் செய்தலை மேற் கொண்ட தன்மை போல் கொடுமைகளைக் கூறிப் புலந்து பேசாதே. நீ இவ்வாறு பேசினால் என் உயிர் எங்ஙனம் நிற்கும்? வழி யாது? அதனைக் கூறுவாய்! என்றான்.

ஏஎ. பின், “எல்லாம் உணர்ந்திருக்கும் பெரிய காட்டில் உள்ள கொற்றவைக்கு அவள் அறியாத சில உண்டாக,