216
அன்பொடு புணர்ந்த ஐந்திணை - மருதம்
அவற்றைப் பேய் அவளுக்குச் சொன்னதைப் போன்று உன் பொய்களை எல்லாம் எனக்குச் சொல்லி என்னை வருத்தாதே. யான் முன்னமே நின் வஞ்சனைகளை அறிந்துள்ளேன்” என்று சொன்னாள்.
அதைக் கேட்ட தலைவன், என்னைப் பேய் என்று கூறி வெறுக்காதே, என்மீது தவறுகளைக் கூறுதற்கு அலையாதே’ என்று கூறினான். பின்பும், “இனிய புன்னகைய உடையாய்! நீ என்மீது ஏற்றிச் சொல்ல விரும்பிய தீதை நான் உடையவன் அல்லேன். மன்னன் சினம் கொள்பவன் மீது ஒரு தவறு உண்டோ? தவறு இல்லையாயினும் சினம் கொள்வான் அல்லனோ? அங்ஙனம் மன்னன் சினம் கொண்டால் அதற்கு ஒரு கழுவாய் இல்லை” என்றான்.
அதைக் கேட்ட தலைவி, ‘நெஞ்சே, இவனைப் பொய் சொல்ல விடேன் என்று மாறுபட்டுச் சினம் கொண்டால், தப்பினேன் என்று என் அடிகளில் விழுந்து வணங்கினாலும் வணங்குவான். ஆதலால் நம்மை மறந்து நாம் ஒருகாலமும் மாட்சிமைப்பட்டிருத்தலை நினையாத இவனுக்கு இந்த ஊடல் போரில் தோற்று அதன் பயனைக் காண்போம் என்று உடல் நீங்கப் பெற்றாள் தலைவி.
247. குறை கூறாதே
கண்டேன் நின் மாயம் களவு ஆதல், பொய்ந் நகா, மண்டாத சொல்லித் தொடாஅல்; தொடீஇய நின் பெண்டிர் உளர்மன்னோ, ஈங்கு.
ஒண்தொடி! நீ கண்டது எவனோ தவறு?
கண்டது நோயும் வடுவும் கரந்து, மகிழ் செருக்கி, பாடு பெயல் நின்ற பானாள் இரவில்தொடி பொலி தோளும், முலையும் கதுப்பும் வடிவு ஆர் குழையும், இழையும் பொறையா ஒடிவது போலும் நுசுப்போடு, அடி தளரா ஆராக் கவவின் ஒருத்தி வந்து - அல்கல் தன் சீர் ஆர் ஞெகிழம் சிலம்ப, சிவந்து நின் போர் ஆர் கதவம் மிதித்தது அமையுமோ?