பக்கம்:அன்பொடு புணர்ந்த ஐந்திணை (மருதம்).pdf/218

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தொகை - வகை - உரை : த. கோவேந்தன்

217


ஆய்இழை ஆர்க்கும் ஒலி கேளா, அவ் எதிர் தாழாது எழுந்து நீ சென்றது அமையுமோ மாறாள் சினை.இ, அவள் ஆங்கே, நின் மார்பில் நாறு இணர்ப் பைந்தார் பரிந்தது அமையுமோ? தேறு நீ தீயென் அலேன் என்று மற்று அவள் சீறடி தோயா இறுத்தது அமையுமோ? கூறு இனி, காயேமோ, யாம்?

தேறின், பிறவும் தவறு இலேன் யான்; அல்கல் கனவுக்கொல் நீ கண்டது.

‘கனை பெயல் தண் துளி வீசும் பொழுதில் குறி வந்தாட் கண்ட கனவு என, காணாது, மாறு உற்றுபண்டைய அல்ல, நின் பொய்ச் சூள், நினக்கு எல்லா! நின்றாய்; நின் புக்கில் பல. மென் தோளாய்! நல்கு, நின் நல் எழில்; உண்கு.

ஏடா குறை உற்று நீ எம் உரையல்-நின் தீமை பொறை ஆற்றேம் என்றல் பெறுதுமோ, யாழ நிறை ஆற்றா நெஞ்சு உடையேம்? - கலி 90 தலைவி, “உன் பரத்தமை இக் காலத்துக் களவொழுக்கம் ஆதலைக் கண்டேன். எனவே, பொய்யாகவே சிரித்து நான் விரும்பாதவற்றைச் சொல்லி என்னைக் தொடாதே. நீ என்னைத் தொடுவதற்கு உனக்கு இங்குப் பெண்டிராய் உள்ளவர் இருக்கின்றாரோ? இல்லையே!” என்று தலை வனைப் பார்த்துச் சொன்னாள்.

அதைக் கேட்ட தலைவன், “ஒளி பொருந்திய வளையலை உடையவளே, நீ என்னிடம் உள்ள தவறாகக் கண்டது எது? என்று வினவினான்.

யான் கண்ட தவறு. ஒருத்தி தான் அடைந்த காம நோயையும், அதனால் எழுந்த அலரையும், மற்றவர் அறி யாமல் மறைத்து மகிழ்ச்சி இல்லாது இருக்கவும், மழை பெய்யும் ஒருநாள் பாதியாகிய இரவுப்போதில், தொடி பொலிவுடைய தோளும், முலையும் கூந்தலும் மகர வடிவான குழையணியும் மற்ற அணிகளும் தனக்குச் சுமையாய் முறி