பக்கம்:அன்பொடு புணர்ந்த ஐந்திணை (மருதம்).pdf/221

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

220

அன்பொடு புணர்ந்த ஐந்திணை - மருதம்


மார்பின் மாலையும் நறுமண மலரால் செய்த கண்ணியும், விரும்பிய பரத்தையர் ஊடுகின்றதால் சினந்து பற்ற நிறம் கெட்டு என் தலைவனின் அலங்காரம் நேற்று இருந்ததை விட இன்று நன்றாக உள்ளது என்று காமக்கிழத்தி யுரைத்தாள்.

அதைக் கேட்ட தலைவன், “அணைபோலும் மென்மை யானதோளை உடையவளே, இவன் பிரிந்து சென்றால் பரத்தை யரிடமல்லாது போக மாட்டான் என்று மனத்தில் எண்ணிக் கொண்டு அந்த ஐயத்தால் நான் செய்யாத செயல்களைச் சொல்லி இங்குச் சினம் கொள்ளக் காரணமான என் குறைதான் யாது? என்னிடம் தீதில்லை.இதனைத் தெய்வத்தால் நான் தெளி விப்பேன். காண்பாய்.இனி என்னைச் சினக்காதே’ என்றான்.

அதைக் கேட்ட தலைவி ‘யான் நீங்கிய பின்பு நீ செய்த செயலை அறிவேன். உனது சூள் பொய் என்பதையும் அறிவேன். புதிய பரத்தையரது தொடி அழுந்திய வடுவையும், அவர் உன்னைத் தழுவுதலால் குழைந்த நின் மாலையையும், உன் குறியால் பொய்க்கப்பட்ட பரத்தையர் சினந்து கூர்மை யான நகத்தால் தாம் விரும்பியபடி வடுச் செய்த மார்பை யும், சேரியிலிருந்த செவ்வரியையும் செருக்கையுடைய மையுண்ட கண்களையுடைய மங்கையரின் நிறைவு பெறாத முயக்கத்தால் பூசிய தன்மை கெட்டுச் சிதறிய சந்தனத்தையும் பெற்ற உன் வடிவைக் கண்டேன். அதனால் இதற்குரிய நானும் உன்னுடன் ஊடுதலை விட்டுவிட்டேன். இனி அப் பரத்தையரிடம் போவாயாக!” என்றாள். -

அதைக் கேட்ட தலைவன், “தெரிந்தெடுத்த அணியை அணிந்தவளே! நான் நின்னைத் தெளிவித்ததைக் கொண்டு தெளியாமல் சினந்தாய். நான் தீமையற்றவன் என்பதை உன்னைத் தாழ்ந்து நெறிப்படி நின் நெஞ்சத்தில் நிறுத்து வேன்! காண்பாய்!” என்று சொன்னான்.

அதைக் கேட்ட தலைவி, “இவனது கருத்து தீதின்மை என்பதை நெஞ்சத்திடத்தில் நிறுத்துவதே ஆனால், இவன் வலிமையைக் காண்பாயாக’ என்று நெஞ்சடன் கூறினாள். பின் அவனை நோக்கி, “நான் உன்னுடன் வேறுபட்ட அப் போதே நெஞ்சம் கலங்குவாய்! யான் வேறுபடாமல் நின் கையில் அகப்படுவேனாயின், அக் கலக்கத்தை மாறுபட்ட