தொகை - வகை - உரை : த. கோவேந்தன்
221
பொழுதே என்னை இகழ்ந்த பரத்தையரிடம் செல்வதற்கு மனம் மயங்குவாய். எனவே எத்தகைய சொல்லையும் சொல்லி என் ஊடலைப் போக்க முயல்வது வேண்டாத செயல். இக் குறையொழிய நீ வேறு குற்றங்களைச் செய்தாலும் அவற்றைத் தள்ளி, உன்னைக் கண்டால் அப்போதே என் மனம் உன்னிடத்தே நெகிழ்ந்து வருமாயின் என் நெஞ்சின் தன்மையை உட்கொள்ளாது, நீ நான் விரும்பும்படி என்னைத் தெளிவிக்கும் செயல்களை என்ன காரியத்துக்காகச் செய் தாய்?” என்று தலைவி ஊடல் நீங்கினாள்.
249. அழகுக் கனவு புன வளர் பூங் கொடி அன்னாய் கழியக் கனவு எனப்பட்டது ஒர் காரிகை நீர்த்தே முயங்கிய நல்லார் முலை இடை மூழ்கி மயங்கி, மற்று ஆண்டு ஆண்டுச் சேறலும் செல்லாது உயங்கி இருந்தார்க்கு உயர்ந்த பொருளும்; அரிதின் அறம் செய்யா, ஆன்றோர், உலகும் உரிதின் ஒருதலை எய்தலும் வீழ்வார்ப் பிரிதலும் ஆங்கே புணர்தலும் தம்மில் தருதல் தகையாதால் மற்று. நனவினால் போலும், நறுநுதால் அல்கல் கனவினால் சென்றேன் - கலி கெழு கூடல் வரை உறழ் நீள் மதில் வாய் சூழ்ந்த வையைக் கரை அணி காவினகத்து. உரை, இனி, தண்டாத் தீம் சாயல் நெடுந்தகாய் அவ்வழிக் கண்டது எவன் மற்று நீ? கண்டது - உடன் அமர் ஆயமொடு அவ் விசும்பு ஆயும் மட நடை மா இனம், அந்தி அமையத்து, இடன் விட்டு இயங்கா இமையத்து ஒரு பால் இறை கொண்டு இருந்தன்ன - நல்லாரைக் கண்டேன், துறை கொண்டு உயர் மணல் மேல் ஒன்றி நிறைவதை.
ஒர்த்தது இசைக்கும் பறை போல், நின் நெஞ்சத்து வேட்டதே கண்டாய், கனா.