தொகை - வகை - உரை : த. கோவேந்தன்
223
தெரிஇழை ஆர்ப்ப மயங்கி இரிவுற்றார், வண்டிற்கு வண்டலவர் கண்டேன், யான். நின்னை நின் பெண்டிர் புலந்தனவும், நீ அவர் முன் அடி ஒல்கி உணர்த்தினவும், பல் மாண் கனவின் தலையிட்டு உரையல்; சினை.இ யான் செய்வது இல் என்பதோ? கூறு.
பொய்கூறேன் அன்ன வகையால் யான்கண்ட கனவு தான் நன் வாயாக் காண்டை-நறுநுதால் பல் மானும் கூடிப் புணர்ந்தீர் பிரியன்மின்; நீடிப் பிரிந்தீர்! புணர் தம்மின் என்பன போல அரும்பு அவிழ் பூஞ் சினைதோறும் இருங் குயில் ஆனாது அகவும் பொழுதினான், மேவர நான் மாடக்கூடல் மகளிரும் மைந்தரும் தேன் இமிர் காவில் புணர்ந்திருந்து ஆடுமார், ஆனா விருப்போடு அணி அயர்ப, காமற்கு வேனில் விருந்து எதிர்கொண்டு. - கலி 92 காவனத்தில் வளர்ந்த மலர்க்கொடி போன்றவளே! பொருள் தேடச் சென்று முயலாமல் வருந்தியிருப்பவர்க்கு அவர்கள் இருந்த இடங்களில் மிக்க பொருளும் தானே செல்லுதலும் அரியதாய் உள்ளதால், உலகம் தமக்கு உரிய தாய் அறத்தைச் செய்யாது இங்ஙனம் இருக்கவும், அறம் செய்வதற்கு அமைந்தவர் அவ் அறத்தைச் செய்தலும் கனவில் இல்லையாயிற்று தாம் முயங்கிய மகளிரின் முலைகளில் அழுந்திய இன்பத்தில் மயங்கி விரும்பும் கணவரை மகளிர் ஊடலால் பிரிதலும் அப்போதே ஊடல் நீங்கிப் புணர்தலும் ஆகிய இன்பத்தைக் கனவில் தருவது தவிராது. இனி மிக்க காதலால் கனாவென்று சொல்லப்பட்டது. அதுதான் ஓர் அழகையுடைய தன்மையாய் இருந்தது என்றான். தலைவன் தான் கண்ட கனவு இன்பத்தைத் தந்தது. அறமும் பொருளும் தரவில்லை என்று உரைக்கின்றான்.
நறுமணம் கமழும் நெற்றியை உடையவளே. ஆரவாரம் பொருந்திய மதுரையின் மலைபோல் உயர்ந்த நீண்ட மதி லிடத்தைச் சூழ்ந்த வையை ஆற்றங்கரையை அழகுபடுத்தும்