பக்கம்:அன்பொடு புணர்ந்த ஐந்திணை (மருதம்).pdf/225

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

224

அன்பொடு புணர்ந்த ஐந்திணை - மருதம்


பொழிலில் நனவில் சென்றாற்போல் இரவுப் பொழுதில் கனவு

அது கேட்ட தலைவி, ‘அமையாத இனிய மென்மை யுடைய பெருந்தகையே! நீ அங்குக் கண்டது எத்தன்மை கொண்டது? அதைச் சொல்வாய்! என்றாள்.

அதைக் கேட்ட தலைவன் “யான் கண்டதைக் கூறுவேன் கேட்பாயாக. அன்னங்கள் நீங்காத தன்மையுடைய இமய மலையிலே ஒரு பக்கத்தில் அழகிய வானத்தில் இரை கவர்ந்த வந்த இளைப்பால் ஒய்ந்து, பறக்கும் இயல்புகொண்ட அன்னக் கூட்டம் மாலைக் காலத்தில் தங்கி உள்ள தன்மை யாக, துறை தன்னிடம் உடைய மணற்குன்றில் நல்லவர் தம் ஆயத்தாருடன் இருக்கக் கண்டேன்.

அதைக் கேட்ட தலைவி, “பறை கொட்டுபவன் தன் மனத்துள் உணர்ந்த ஓசையைத் தானும் ஒலிக்கும் பறை போல் உன் நெஞ்சத்து விரும்பிய இன்பத்தையே நீ கனவாகக் கண்டாய்” என்றாள்.

அதைக் கேட்ட தலைவன் “நீ விரையாதே! கேட்டால் சினப்பாய்” என்றான்.அதைக் கேட்ட தலைவி"மேலே சொல்.” என்றாள். அதனைக் கேட்ட தலைவன், “இனிய புன்னகை உடையோளே, அங்கே பிறந்தது இதுவாக இருக்கும்! அதைக் கேள். கொடி போன்ற அழகை உடையார் அச் சோலையில் எழுந்து நிறைந்த பூங்கொடியை எல்லாருக்கும் பொதுவாய் எண்ணி வளைத்துக் கொத்துகளைப் பறித்தனர். பறிக்க அது, வண்டின் கூட்டம் கொம்புகள் அலர்ந்த வேப்ப மாலை பூண்ட பொதியமலை உடையவன் போரிட்ட பகை நாட்டு அரண் போல் அங்கு உடைந்தது.

அங்ஙனம் உடைந்த கொத்துகளில் மொய்த்த வண்டுகள் எல்லாம் அங்கு நின்ற அழகு மகளிர் நலத்தைக் கைக் கொண்டு நுகர்பவை போன்று ஒன்றாய்க் கூடி மொய்த்தன. அதனால் அவ் வண்டின் போரிலே அவர்களின் ஒருத்தியின் மலர் மாலையும் முத்துமாலையும் வேறொருத்தியினது அசையும் தொடியுடன் தடுத்துக் கொண்டன. ஒருத்தியின் நெற்றியில் திலகத்தைச் சேர்ந்த தலையில் கிடந்த முத்து வடத்தை வேறொருத்தியின் அழகுக் காதில் கிடந்த அழகு