பக்கம்:அன்பொடு புணர்ந்த ஐந்திணை (மருதம்).pdf/226

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தொகை - வகை - உரை : த. கோவேந்தன்

225


மாட்சி மைப்பட மகரக் குழை என்ற காதணி சிக்கிக் கொண்டது. ஒருத்தியினது தேமலையுடைய அகன்ற அல் குலின் துகிலை வேறொருத்தியின் சிலம்பில் கிடந்த சுறா வடிவுடைய மூட்டுவாய் இடும்புகள் தடுத்தன. ஒருத்தி புலவி யால் கணவனைத் தழுவாதிருந்தவள் வண்டினம் மொய்த்து ஆரவாரம் செய்வதால் வருத்தம் அடைந்து அப் புலவியை நடுவில் கைவிட்டுக் கணவன் வணங்குவதால் அவனுடைய குளிர்ந்த மாலை விளங்கும் மார்பில் பொருந்துவாள்.

ஒருத்தி, அடியில் தொங்கிய ஆடையை ஒரு கையால் பிடித்துக் கொண்டு, மற்ற கையாலே, முடிக்கப்பட்ட முடி குலைந்த கரிய கூந்தலைப் பிடித்துக் கொண்டு மிக்க மலர் கள் பொருந்திய குளத்தில் பாய்வாள்.

ஒருத்தி திரண்டு வண்டுகள் மொய்க்கையால் கையால் ஒட்டமாட்டாதவளாய் நறுமணம் கமழும் மாலையை அறுத்துக் கொண்டு ஒட்டினாள். அதற்கு அவை போகா மையைப் பார்த்து வளைந்த தண்டுகள் உள் வலியாக உள்ளே கொண்ட ஒடத்தில் பாய்வாள்.

ஒருத்தி, அறிவு நீங்குதற்குக் காரணமான கள்ளின் களிப்பால் இமை மூடுகையால், பார்வை மறைந்த கண்ணைக் கொண்டவளாய்ப் பறந்த வண்டுகள் மொய்க்க ஒட்டுபவள் தான் கொண்ட களிப்பால் அவற்றை ஒட்டும் இடம் அறி யாத வளாகக் கை தளரப் பெற்றாள்.

விளையாட்டையுடைய மங்கையர், மிக்க சோலையில் காற்று வீச ஒதுங்கி வளைந்து கொடியும் கொடியும் தம்மில் பிணங்கியவை போல் அணிகள் ஆரவாரிப்பத் தமக்குள் மயங்கி அவ் வண்டுகளுக்குத் தோற்றார். யான் இக் கனவைக் கண்டேன் என்றான்.

அதைக் கேட்ட தலைவி, “உன்னை உன் பெண்டிர் புலந்த வற்றையும், நீ அவரது அடியின் முன் வணங்கிப் புலவி நீங்கப் பெற்றதையும், பல வகையாய்க் கனவின் மேலிட்டுக் கூறு கின்றாய். இங்ஙனம் கூறுதல் நான் சினந்து செய்யும் தீமை ஒன்று இல்லை என்பதை எண்ணியோ, சொல்?” என்றாள்.

அதைக் கேட்ட தலைவன் “நான் பொய் சொல்லேன். நறுமணம் கமழும் நெற்றியை உடையவளே, பல மாட்சிமை