228
அன்பொடு புணர்ந்த ஐந்திணை - மருதம்
“அந்தக் கடவுள், முத்தைப் போன்ற பற்களை உடைய வளே, நாம் மனத்தைச் செய்ய இப்போது தக்க நேரம் என்று அம் முகுத்தம் பொருந்தச் சொன்ன அந்தக் கடவுள்.” என்றான் தலைவன்.
அதைக் கேட்ட தலைவி, “நீ கூறியது எனக்கும் ஒக்கும்.” என்று இகழ்ந்து பின் தனக்கு அது பொருந்தாது எனக் கூறினாள்
தலைவி உள்ளே அழுந்தும் நாவுடன் தலையைச் சாய்த்து, “நீ கூறுவது பொய். ஆதலால் நீ எம்மிடம் அகப்பட்டுக் கொண்டாய். நீ கண்ட கடவுள் இன்னார் என்று நாங்கள் சொல்லக் கேட்க விரும்பியவனே, யாங்கள் சொல்லக் கேட்பாயாக!” என்றாள்.
“உன்னைப் பெறும் ஆசையினால் நீ குறித்த குறி இடத் தில் தப்பாமல் வந்த கடவுள்; கண்டவர்க்கு இறந்துபடும் நிலைமையை உண்டாக்கும் வடிவுடன், விழுந்து எழுந்த பற்களை உடையவராய் உம் மனையிடத்தில் சேர்கின்ற முறைமையுடன் வந்த கடவுளரை நீ கண்டாயோ?” என்று தலைவி வினவினாள்.
“பொருளைக் பெற வேண்டும் என்ற ஆசையால் உன் உள்ளத்தில் எண்ணிய எண்ணமெல்லாம் வாய்ப்பப் பறித்துப் போகும் முறைமையைச் சேர்ந்த கடவுள் மன வேட்கையினை அடக்கும் முறைமையை இகழாராய்த் தன்மைக் கண்டவர் களுக்குத் தீவினை இறும் முறைமையைத் தரும் வடிவுடனே உம் இல்லத்தில் வந்த கடவுளைக் கண்டாயோ!” என்பது வேறொரு பொருள்.
“பார்வையினால் பிணிக்கும் கண் வருத்துவதால் குளிர்ந்த மயிர்ச்சாந்தமும் புழுகும் நாறும் கற்றையான மயிர்க்கு நாட் காலத்து அணியும் அணிக்குப் பொருந்த, நீ முன்னாள் பூவைப் பலியாகப் போக விட்ட கடவுளரைக் காண்டாயோ?” என்றாள்.
“கெடாத விரதத்தால் குதிரை முகமும் மக்கள் உடலும் ஆகிய இரண்டு அழகுக்கும் பொருந்திய சூரபன்மாவைக் கொன்ற சிவந்த வேலையுடைய முருகப் பெருமானைப் புகழ்ந்து, நிறையாத காம வேட்கையினால் திருப்பரங் குன்றி