22
அன்பொடு புணர்ந்த ஐந்திணை - மருதம்
தோழிக்கு-உரைத்தது 31. சூளுரை என்னாவது?
அம்ம வாழி, தோழி! மகிழ்நன் கடன் அன்று என்னுங்கொல்லோ - நம் ஊர் முடம் முதிர் மருதத்துப் பெருந் துறை உடன் ஆடு ஆயமோடு உற்ற சூளே? - ஐங் 31 தலைவி, “தோழியே, கேள்! மகிழ்நன் வளைந்து முதிர்ந்த மருத மரங்கள் நிறைந்திருக்கின்ற பெருந்துறையில் தன் உடன் ஆடும் ஆயத்தார் அறிய அவருடன் உடனிருந்தே இனிப் புற ஒழுக்கத்தைப் பரத்தமையை நான் விரும்பேன்” என்று செய்த சூளுரை மறவாமல் கடைப்பிடித்தல் தனக்கு முறைமையன்று எனக் கூறுவானோ?” என்று தோழியிடம் சொன்னாள்.
32. ஏழு நாள் அழுவர் அவன் பெண்டிர்
அம்ம வாழி, தோழி! மகிநன்
ஒரு நாள் நம் இல் வந்ததற்கு, எழு நாள்
அழுப என்ப அவன் பெண்டிர் -
தீ உறு மெழுகின் ஞெகிழ்வனர் விரைந்தே. - ஜங் 32
தலைவி, “தோழியே, கேள்! நம் இல்லத்தை நோக்கி
மகிழ்நன் ஒருநாள் வந்தான். அவன் பெண்டிர் பொறுக்காமல் தீயிற் பட்ட மெழுகைப் போன்று விரைந்து மனம் நெகிழ்ந்து, ஏழுநாள் வ்ரை அழுது தீர்த்தனர் என்று பலரும் கூறுவர்” என்று தோழிக்கு உரைத்தாள்.
33. தேவையற்றவன்
அம்ம வாழி, தோழி! மகிழ்நன் மருது உயர்ந்து ஓங்கிய விரி பூம் பெருந் துறைப் பெண்டிரொடு ஆடும் என்ப - தன் தண் தார் அகலம் தலைத்தலைக் கொளவே. - ஜங் 33 “தோழி! கேள், மருத மரங்கள் மிகவும் உயர்ந்த விரிந்த பூக்களையுடைய பெரிய நீர்த்துறையில்.மகிழ்நன் தன் குளிர்ந்த மாலை சூடிய மார்பை ஒவ்வொருவரும் புணையாகப் பற்றி