தொகை - வகை - உரை : த. கோவேந்தன்
229
னிடத்தில் உன்னுடன் மாரிக் காலத்தில் பல நாள்களும் தங்கியிருந்த கடவுளைக் கண்டாயோ’ என்றாள் தலைவி.
“நீ பார்த்த கடவுள்களுள் உன் மனத்தைத் தன்னிடம் கொண்ட அகன்ற மார்பைப் பழைய தன்மை குலைத்து போகும்படிச் செய்து மற்றவர் முயங்காதபடி வடுப்படுத்தி யவர் யார், சொல்? அப் பரத்தையர் சிறிது காலம் நீ இங்கே தங்கினால் அவர்கள் சினம் கொள்வார்கள். எனவே எம்மால் சினக்கப்படுபவனே, உன் பொய்யெல்லாம் உள்ள படி நான் அறிந்து தெளிந்தேன்.
“இனியும் அவர்களிடம் செல்லாது இருப்பாயாயின் நின் மாலை அணிந்த மார்புக்கு முட்டுப்பாடு உண்டாகும் அது வன்றி உன்னை முயங்கிய கரிய கூந்தலையுடைய பரத்தையர் எல்லாருக்கும் முட்டுப்பாடு உண்டாகவும் செய்யும் ஆதலால் அங்கே நீ செல்வாயாக!” என்று தலைவி புலந்து கூறினாள் தலைவி.
251. குறளனும் கூனியும் கொண்ட காதல்! என் நோற்றனைகொல்லோ?நீருள் நிழல் போல் நுடங்கிய மென் சாயல் ஈங்கு உருச் சுருங்கி இயலுவாய்! நின்னொடு உசாவுவேன்; நின்றித்தை. அன்னையோ காண் தகை இல்லாக் குறள் நாழிப் போழ்தினான், ஆண்டலைக்கு ஈன்ற பறழ் மகனே! நீ எம்மை, வேண்டுவல் என்று விலக்கினை, நின் போல்வார் தீண்டப் பெறுபவோ மற்று?
மாண்ட எறித்த படை போல் முடங்கி மடங்கி, நெறித்துவிட்டன்ன நிறை ஏர.ல் என்னைப் பொறுக்கல்லா நோய் செய்தாய்; பொறிஇ நிறுக்கல்லேன் நி நல்கின் உண்டு, என் உயிர். குறிப்புக் காண் - வல்லுப் பலகை எடுத்து நிறுத்தன்ன கல்லாக் குறள கடும் பகல் வந்து எம்மை,