பக்கம்:அன்பொடு புணர்ந்த ஐந்திணை (மருதம்).pdf/231

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

230

தி. அன்பொடு புணர்ந்த ஐந்திணை - மருதம்

‘இல்லத்து வா என, மெய் கொளீஇ எல்லா நின் பெண்டிர் உளர்மன்னோ? கூறு. நல்லாய் கேள்: உக்கத்து மேலும் நடு உயர்ந்து வாள் வாய கொக்கு உரித்தன்ன கொடு மடாய் நின்னை யான் புக்கு அகலம் புல்லின், நெஞ்சு ஊன்றும், புறம் புல்லின் அக்குளுத்து புல்லலும் ஆற்றேன்; அருளிமோ, பக்கத்தப் புல்லச் சிறிது. போ, சீத்தை மக்கள் முரியே! நீ மாறு, இனி, தொக்க மரக் கோட்டம் சேர்ந்து எழுந்த பூங்கொடி போல நிரப்பம் இல் யாக்கை தழிஇயினர் எம்மைப் புரப்பேம் என்பாரும் பலரால், பரத்தை என் பக்கத்துப் புல்லியாய் என்னுமால், தொக்க உழுந்தினும் துவ்வா, குறு வட்டா! நின்னின் இழிந்ததோ, கூனின் பிறப்பு?"கழித்து ஆங்கே “யாம் வீழ்தும்” என்று தன் பின் செலவும், உற்றியாக் கூனி குழையும் குழைவு காண். ‘யாமை எடுத்து நிறுத்தற்றால் தோள் இரண்டும் வீசி யாம் வேண்டேம் என்று விலக்கவும் எம் வீழும் காமர் நடக்கும் நடை காண் கவர் கணைச் சாமனார் தம்முன் செலவு காண். ஒஒ காண், நம்முள் நகுதல் தொடீஇயர், நம்முள் நாம் உசாவுவம் கோன் அடி தொட்டேன். ஆங்கு ஆக சாயல் இன் மார்ப அடங்கினேன், ஏஎ! பேயும் பேயும் துள்ளல் உறும் எனக் கோயிலுள் கண்டார் நகாமை வேண்டுவல்; தண்டாத் தகடு உருவ வேறாகக் காவின் கீழ்ப் போதர் அகடு ஆரப் புல்லி முயங்குவேம்துகள் தபு காட்சி அவையத்தார் ஒலை முகடு காப்பு யாத்துவிட்டாங்கு. - கலி 94 “கரையில் நின்ற ஒரு பொருளின் நிழல் நீருக்குள்

தெரிந்தாற் போன்று மென்மையோடு இங்கு உடலில் கூன் பொருந்தப் பெற்று நடப்பவளே! உன்னுடன் ஒரு காரியத்தை