பக்கம்:அன்பொடு புணர்ந்த ஐந்திணை (மருதம்).pdf/233

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

232

அன்பொடு புணர்ந்த ஐந்திணை - மருதம்


அதைக் கேட்டு அவன் அவளை அணுகினான். ஆதலால், “மக்களில் பாதியானவனே, இனி, நீ இந் நிலையைக் கை விடுவாய் என்று அவள் உரைத்தாள். உரைத்தும் பின்பு திரண்ட மரத்தின் வளைவான இடத்தை விட்டு நீங்காமல் பற்றி வளர்ந்த பூங் கொடியைப் போன்று எம் கூனால் வடிவு ஒப்பற்ற உடலை முயங்கி எம்மைப் பாதுகாப்போம் என்று கூறுபவரும் பலராக உள்ளனர். இப் பரத்தையையை உடைய வன் பக்கத்தைத் தழுவுதலைத் தாராய் என்று கூறுவன். இங்ஙனம் இவன் கூற நமக்கு உண்டாகிய குறையாது என்று அவன் கேட்பத் தன் நெஞ்சுக்குள் கூறிக், “குறிய வட்டுப் பலகையைப் போன்றவனே, பலவும் கூடிய உழுத்தம் பணி யாரத்தைவிட, துய்க்கப்பட்டுள்ள கூன் சாதியின் பிறப்பு உன்னை விடத் தாழ்ந்ததோ?” என்றாள் கூனி.

அதைக் கேட்ட குறளன், “யான் உன்னை விரும்புவேன்” என்று சொல்லி அவள் பின் செல்லல் செய்தும், அதற்கு மனம் பொருந்தாத கூனி, “நம் அருகினின்று அவ்விடத்தே போய்க் குழையும், குழைவைக் காணாய் நெஞ்சே!” என்று அவள் கேட்குமாறு சொன்னாள்.

அதைக் கேட்ட கூனி, “ஊர்கின்ற யாமையை எடுத்து நேராக நிறுத்தியதைப் போன்று, நெடியவனாய்த் தோள் இரண்டையும் விலாவுக்குள் வீசி, வரும் உன்னை யாம் விரும்பேம் என்று கூறி விலக்கவும், எம்மை விரும்பி வரும் காமனார் நடக்கும் நடையை மனமே காணாய்” என்றாள். அதைக் கேட்ட குறளன், “ஒருவரை ஒருவர் முயங்குதற்குக் காரணமான அன்பையுடைய சாமனார் தமையனாகிய காமன் நடையைக் காணாய்’ என்று நடந்து காட்டினான்.

அதைக் கேட்ட கூனி, “ஓ! இவன் நடையைப் பார்” எனக் கூறினாள். அதைக் கேட்ட குறளன், நம்முள்ளே நாம் கூடி மகிழ்வதற்கு யான் நின் மெய்யைத் தீண்டுதற்குக் குறியிடம் இன்ன இன்ன இடமாகும் என்று தம்முள் நாம் உசாவக் கடவோம் இனி உன்னை இகழ்ந்து சொல்லேன். அரசன் அடியைத் தொட்டுச் சூள் உரைத்தேன” என்றான்.

அதைக் கேட்ட கூனி, “அப்படியே ஆகுக! மென்மை யால் இனிய மார்பனே, யானும் இகழ்ந்து பேசிவதைக்