தொகை - வகை - உரை : த. கோவேந்தன்
233
கைவிட்டேன். இனிமேல் இக் கோயிலுள் ஏர்’ என இகழ்ந்து, பேயும் பேயும் துள்ளும் விதத்தை இக் கூனியும் குறளனும் கூறும் என்று சொல்லிச் சிரிக்காதிருத்தலை விரும்புவேன். ஆதலால் அமையாத பொன்தகடு போன்ற உருவத்தை உடையவனே, கோயிலுக்கு அப்பால் உள்ள அறிவையுடைய அவையில் உள்ளார் திரட்சி பொருந்திய ஒலையின் தலையை வெட்டி அதன் தலையில் அரக்கு இலச்சினை இட்டது போல் நிாம்பாத உடலினுள் வாய் முயக்கம் பெற்று நிறையுமாறு இறுக்கமாகத் தழுவிக் கூடக் கடவோம்” என்று கூறினாள்.
252. நீ கண்ட காடைப் போர்
நில், ஆங்கு, நில், ஆங்கு இவர்தரல் - எல்லா நீ நாறு இருங் கூந்தலார் இல் செல்வாய், இவ் வழி ஆறு மயங்கினை போறி! நீ வந்தாங்கே மாறு, இனி, நின், ஆங்கே, நின் சேவடி சிவப்ப செறிந்து ஒளிர் வெண் பல்லாய்! யாம் வேறு இயைந்த குறம்பூழ்ப் போர் கண்டேன் அனைத்தல்லது, யாதும் அறிந்ததோ இல்லை, நீ வேறு ஒர்ப்பது. குறும்பூழ்ப் போர் கண்டமை கேட்டேன், நீ என்றும், புதுவன ஈகை வளம் பாடி, காலின் பிரியாக் கவி கைப் புலையன் தன் யாழின் இகுத்த செவி சாய்த்து இனி இனிப் பட்டன ஈகைப் போர் கண்டாயும் போறி, மெய் எண்ணின், தபுத்த புலர்வில் புண். ஊரவர் கவ்வை உளைந்தீயாய் அல்கல் நின் தாரின்வாய்க் கொண்டு முயங்கி, பிடி மாண்டு, போர் வாய்ப்பக் காணினும் போகாது கொண்டு, ஆடும் பார்வைப் போர் காண்டாயும் போறி; நின் தோள் மேலாம் ஈரமாய்விட்டன. புண். கொடிற்றுப் புண் செய்யாது, மெய்ம் முழுதும் கையின் துடைத்து, நீ வேண்டினும் வெல்லாது கொண்டு, ஆடும் ஒட்டிய போர் கண்டாயும் போறி, முகம்தானே கொட்டிக் கொடுக்கும் குறிப்பு.