தொகை - வகை - உரை : த. கோவேந்தன்
235
உண்மையாய் எண்ணின் புலராத பசுமையான புண்கள் உன்னைக் கொன்றன. இதனை ஆற்றிய விதம் என்?” என்றாய். “ஊரவர் கூறும் அலருக்கு வருந்தாதவனாய்த், தங்கு கின்ற நின் மார்பில் உள்ள மாலையில் கையால் அணைத்துக் கொண்டு தழுவி அகப்படுத்துதலால் மாட்சிமைப்பட்டு வேறு சிலரை அகப்படுத்திக் கொண்டு வருவதற்குப் பார்வை யால் போக விட்ட மகளிரால் உண்டானது ஊடற்போர். அதைக் கண்டாராகிலும் அதற்கு ஊடிப் போகாமல் உன்னைக் கைக் கொண்டு கலந்துவக்கும் கலவிப் போரைக் கண்டவன் போலவும் இருந்தனை. உன் தோளில் புண்கள் எல்லாம் புலராமல் ஈரமாகவே உள்ளன.” என்றாள்.
(இதற்கு வேறு ஒரு பொருள்: ஊரவர் நீ காடைப் பறவையைக் கைக் கொண்டு திரிகின்றாய் எனக் கூறு கின்றனர். அதற்கு நீ வருந்தவில்லை. மார்பில் புள்ளை அணைத் துக் கொண்டு முயங்கித் தசை கரையும் படிகையால் பிடித்த லால் மாட்சிமைப் பட்டு, தனக்கு மாறான புள்ளின் போரைக் காணினும், அதற்கு அஞ்சிப் போகாது போர் செய்தலை மேற்கொண்டு பின்னும் போரைச் செய்யும் பார்வையாகிய புள்ளின் போரைக் கண்டவன் போலவும் உள்ளாய்)
இவளுக்கு வருத்தம் உண்டாகும் என்று புணர்ச்சிக் காலத்துக் கன்னத்தில் செய்யும் வடுக்களையும் செய்யாமல் உடல் முழுவதையும் கையால் எப்போதும் தடவி, நீ விரும்பினும், நீ அவளை வெல்லாமல் கொண்டு புணரும் ஒட்டுதலை (பந்தயம் வைத்தலை) உடையவளின் கல்விப் போரைக் கண்டவன் போலவும் உள்ளாய். உன் மனக் குறிப்பை நின் முகமே காட்டிக் கொடுக்கும்” என்றாள்.
தான் பரத்தை விரும்பிய நீர் விளையாட்டு முதலிய வற்றில் நின்னைப் பந்தயம் வைத்தலை உடையவள்.
(இதன் வேறு பொருள்: காடைப் பறவைக்கு இடுவதற்குச் செவியின் மயிரைப் பறிக்குங் கால் புண்ணாகும்படி பறியாது மெத்தெனப் பறித்து மெய்யை முழுக்கப் பலமுறை துடைத்த, நீ கொண்டாடினும், தான் எதிர்த்த புள்ளை வெல்லாமல் அப் புள்ளினைக் கொண்டு போர் செய்யும் இயக்குபவ னாகிய புள்ளின் போரைக் கண்டவன் போலவும் உள்ளாய்)