238
அன்பொடு புணர்ந்த ஐந்திணை - மருதம்
தற்குக் காரணமான வேர்வையை உடையாய். தோளில் கிடந்து நிறம் மாறிய மாலையை உடையாய் ஆதலால், நீ எங்குச் சென்று இங்கு வந்தாய்,” என்று தலைவி தலைவனைப் பார்த்து வினவினாள்.
அதைக் கேட்ட தலைவன், “நான் சொல்வதைக் கேள் உயர்ந்து தனக்கு நிகரான நீலமலரைத் தொடுத்தாற் போன்ற கண்ணை உடையவளே! நான் குதிரை ஏறி குதிரையேற்றம் பயின்று வருகின்றேன்!” என்றான்.
அதைக் கேட்ட தலைவி, “நீ ஏறினது குதிரைதான்! அறிந்தேன். அதைக் கேள். ஐந்து பால் பகுதி நீங்காத ஐந்து வகையை உடைய கூந்தலாகிய பல மயிர்களைப் பல முறையும் கத்தரிகையால் கத்தரிக்கும் பிடரி மயிரையும், மயிர் முடி மீது விரித்து நிறுத்திய துஞ்சாகிய சிவந்த தலை யாட்டத்தையும், நீல மணியைத் தோளில் வைத்துத் தகைத்து இயற்றப்பட்ட கட்டு வடமாகிய கழுத்திற் கட்டும் வல்லிகை யையும், மென்மையான காதிற் கிடக்கும். புல்லிகை என்னும் அணியான கீழே தொங்கும் தன்மையுடைய கன்ன சாமரை யையும் தெய்வ உத்தி என்னும் அணியின் அருகே சேர்த்து ஒரு வடமாய்த் தொங்கும் சுட்டியாகிய குதிரை. கண்ணால் பார்த்து அஞ்சம்படியாய் விட்டு வைத்த அழகு பெற்ற சம்மட்டியையும், நூலால் ஆன முறுக்கேறிய திண்ணிய கடிவாளத்தையும், இனம் ஒத்த மணிகளால் ஆன தன்னில் ஒப்புடைய முக்கண்டன் கட்டுவடமாகிய பலபல நிறத்தை யுடைய கண்டிகையையும், பொன்னால் செய்த மேகலை யாகிய கழுத்தில் கட்டிய கிண்கிணித் தண்டையையும், அடி யில் சமைத்துக் கட்டிய சிலம்பான செச்சையும் ஆரவாரிப்பச் செலுத்தி நீ காதலித்து ஏறின விருப்பத்தை உடைய குதிரையை, குதிரை பழகும் களத்தின் வெளியிலன்றி அழகைப் பெற்ற சாந்து பூசப்பட்ட மாடத்தில் அழகையுடைய நிலா முற்றத்தில் ஆதி எனும் நெடுஞ் செலவை அதற்குக் கொளுத்தி இளைத்தாய். ஆதலால் இனி நல்ல அரசப் பாகன் ஆவாய். நீ வாழ்க!” என்றாள்.
“ஞாயிற்றின் கதிர் விரியும் விடியற்காலத்தில் கையில் கொண்ட அலகால் குப்பையை வாருதலை உடைய மதுரை