பக்கம்:அன்பொடு புணர்ந்த ஐந்திணை (மருதம்).pdf/24

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தொகை - வகை - உரை : த. கோவேந்தன்

23


முயங்கும்படி பரத்தையரோடு நீராடுகின்றான் எனச் சொல்வர்” எனத் தலைவி சொன்னாள். ஆதலால் அத் தகையவனுக்குத் தான் தேவையற்றவள் என்று வாயில் மறுத்தாள் தலைவி.

34. கண்கள் ஆம்பலின் நிறம் எய்தின அம்ம வாழி, தோழி! நம் ஊர்ப் பொய்கைப் பூத்த, புழைக்கால் ஆம்பல் தாது ஏர் வண்ணம் கொண்டன - ஏதிலாளர்க்குப் பசந்த என் கண்ணே. - ஐங் 34 தலைவி, “தோழியே, கேட்பாய், அன்பு இல்லாதவனாய்ப் புறத்தே ஒழுகும் காதலன் பொருட்டாகப் பசப்புற்ற என் கண்கள், நம் ஊரில் உள்ள பொய்கையில் மலர்ந்த துளை பொருந்திய தண்டை உடைய ஆம்பல் மலரின் தாதைப் போன்ற நிறத்தை எய்தின” என்று தோழிக்குச் சொன்னாள்.

35. ஒளி மங்கியது மேனி

அம்ம வாழி, தோழி! நம் ஊர்ப்

பொய்கை ஆம்பல் நார் உரி மென் கால்

நிறத்தினும் நிழற்றுதல் மன்னே,

இனிப் பசந்தன்று, என் மாமைக் கவினே. - ஐங் 35

“தோழி! கேள்! இதுகாறும் நம் ஊரில் பொய்கையில் மலர்ந்த ஆம்பலின் நார் உரிக்கப்பட்ட மெல்லிய தண்டினும் மிக ஒளிர்தலைச் செய்த என் மாமை நிற அழகு கெட்டது; இப்போதோ மேனி ஒளி மங்கி விட்டது” எனத் தலைவி யுரைத்தாள்.

36. இன்றியமையாதவன்

அம்ம வாழி, தோழி! ஊரன் நம் மறந்து அமைகுவனாயின் நாம் மறந்து உள்ளாது அமைதலும் அமைகுவம்மன்னே - கயல் எனக் கருதிய உண்கண் பயலைக்கு ஒல்காவாகுதல் பெறினே. - ஐங் 36 தலைவி, “தோழியே, கேள், ஊரனான நம் காதலன் நம்மை மறந்து உறைவானானால், கயல் போன்ற மை பூசிய