தொகை - வகை - உரை : த. கோவேந்தன்
239
யின் பெரிய முற்றம் போல் நின் உடலில் கீறியது குதிரையோ, வீரனே?
“அந்தக் குதிரை கூர்மையான நகத்தால் மாட்சிமை யுடைய குளம்பைக் கொண்டது. ஆதலால் மிகவும் கொடி யதே, அதனை ஏறும் நீ தப்பின்றி வாழ்வாயாக!
“மூங்கிலால் ஆன உழக்காலும் நாழியாலும் செதிகை என்ற பெயர் கொண்ட தொழில்களாக வண்ணங்களைத் தோய்த்துக் குத்தின குதிரையுடலின் சேணம் போல நின் உடலில் கவ்வியது குதிரையோ கூறுவாய்?” என்றாள் தலைவி. -
“சீ கெட்டது! தனக்கு ஒரு பயனும் இல்லாது இருக்க வடுப்படுத்துவதற்கு உரியதல்லாத இடத்தே வடுவை உண்டாக்கியது. ஆதலால் இந்தக் குதிரை பெரிதும் வியப்புக்கு உரியதே இக் குதிரையை ஏறின நீ தீங்கின்றி வாழ்க!
“இன்று நீ ஏறிய குதிரை மிகவும் நல்லது. அதை இப்போது அறிந்து கொண்டேன். அது, அறநூல் கூறிய வழியால் சிறந்த மணம் செய்து கொண்ட மேகலை என்ற அணி அணிந்த காமக்கிழத்தி. யானை குதிரையோ அன்று! பெரும, பாண் தொழிலுக்கு அயலவனாகிய பெரிய பாணன் து.ாதுவனாய்ப் போக, அங்குப் பரத்தையருடன் உண்டான மாறுபாட்டால் வந்த காற்றுப் போல் ஒடும் குதிரை அதுவே. உன் பழைய வடிவை முன் கூறியபடியே கெடுக்கும். ஆதலால் அக் குதிரை மீது நீ இனி ஏறாதே, அல்லது அப் பரத்தை குதிரையாக நீ அரசப் பாகனாகி எந்நாளும் ஏறின், இங்கு வாராமல் திரி இனியும் இங்குத் தாமதிக்காதே, அக் குதிரையை ஏறுதற்குப் போ” என்று தலைவி வெறுத்துக் கூறினாள்.
254. புதிய பரத்தையரிடமே போ! அன்னை கடுஞ்சொல் அறியாதாய் போல, நீ என்னைப் புலப்பது ஒறுக்குவென்மன் யான்சிறுகாலை இற் கடை வந்து, குறி செய்த அவ் வழி என்றும் யான் காணேன் திரிதர, ‘எவ் வழிப் பட்டாய்? சமனாக இவ் எள்ளல்.