பக்கம்:அன்பொடு புணர்ந்த ஐந்திணை (மருதம்).pdf/241

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

240

தி. அன்பொடு புணர்ந்த ஐந்திணை - மருதம்

முத்து ஏர் முறுவலாய் நம் வலைப் பட்டது ஒர் புத்தியானை வந்தது; காண்பான் யான் தங்கினேன். ஒக்கும்

அவ் யானை வனப்பு உடையத்தாக கேட்டேன்; அவ் யானை தான் சுண்ண நீறு ஆடி, நறுநறா நீர் உண்டுஒள் நுதல் யாத்த திலக அவிர் ஒடை, தொய்யில் பொறித்த வன முலை வான் கோட்டு, தொய்யகத் தோட்டி, குழை தாழ் வடி மணி, உத்தி பொறித்த புனை பூண் பருமத்துமுத்து ஏய்க்கும் வெண் பல் நகை திறந்து, நல் நகர் வாயில் கதவ வெளில் சார்ந்து, தன் நலம் காட்டி, தகையினால், கால் தட்டி வீழ்க்கும், தொடர் தொடராக வலந்து, படர் செய்யும் மென் தோள் தடக் கையின் வாங்கி, தற் கண்டார் நலம் கவளம் கொள்ளும், நகை முக வேழத்தை இன்று கண்டாய் போல் எவன் எம்மைப் பொய்ப்பது, நீ? எல்லா கெழீஇ தொடி செறிந்த தோள் இணை, தத்தித் தழிஇக் கொண்டு, ஊர்ந்தாயும் நீ. குழிஇ அவாவினால், தேம்புவார் இற் கடை ஆறா உவா அணி ஊர்ந்தாயும் நீ.

மிகாஅது சீர்ப்பட உண்ட சிறு களி ஏர் உண்கண் நீர்க்கு விட்டு, ஊர்ந்தாயும் நீ. சார்ச்சார் நெறிதாழ் இருங்கூந்தல் நின் பெண்டிர் எல்லாம் சிறுபாகராகச் சிரற்றாது, மெல்ல, விடாஅது நீ எம் இல் வந்தாய்; அவ் யானை கடா அம் படும் இடத்து ஒம்பு. - கலி 97 “யான் நின்னைப் புணர்தற்கு நீ குறித்த குறியிடத்தில்

சென்றேன். அங்கு எந்நாளும் உன்னைக் காணாதவளாய்ப் பல முறையும் திரிந்தேன். என் நிலை இதுவாக நீ விரும்பி ஒழுகும் பரத்தை நீ எவ்விடத்துச் சென்றாய் என்று நாட் காலத்தில் என் வீட்டின் வாசலிலே வந்து கடுஞ்சொல் சொல்லி உன்னைப் புலப்பாள். அதனை நீ அறியாதாதவன்