தொகை - வகை - உரை : த. கோவேந்தன்
243
ஒஒl புனல் ஆடினாய் எனவும் கேட்டேன்; புனல் ஆங்கே நீள் நீர் நெறி கதுப்பு வாரும் அறல் ஆக, மாண் எழில் உண் கண் பிறழும் கயல் ஆக, கார் மலர் வேய்ந்த கமழ் பூம் பரப்பு ஆகம், நானுச் சிறை அழித்து நன்பகல் வந்த அவ் யாணாப புதுப புனல ஆடினாய, முன மாலை, பாணன் புணையாகப் புக்கு. ஆனாது அளித்து அமர் காதலொடு அப் புனல் ஆடி, வெளிப்பாடு கவ்வையை யான் அறிதல் அஞ்சி, குளித்து ஒழுகினாய் எனவும் கேட்டேன்; குளித்தாங்கே போர்த்த சினத்தான் புருவத் திரை இடா, ஆர்க்கும் ஞெகிழத்தான் நல் நீர் நடை தட்பச் சீர்த்தக வந்த புதுப் புனல் நின்னைக் கொண்டு, ஈர்த்து உய்ப்பக் கண்டார் உளர். ஈர்த்தது உரை சால் சிறப்பின் நின் நீர் உள்ளம் வாங்க, புரை தீர் புதுப் புனல் வெள்ளத்தின் இன்னும் கரை கண்டதுTஉம் இலை. நிரைதொடீஇ பொய்யா வாட் தானை, புனை கழற் கால், தென்னவன் வையைப் புதுப் புனல் ஆடத் தவிர்ந்ததைத் தெய்வத்தின் தேற்றித் தெளிப்பேன்; பெரிது என்னைச் செய்யா மொழிவது எவன்? மெய்யதை மல்கு மலர் வேய்ந்த மாயப் புதுப் புனல் பல் காலும் ஆடிய செல்வழி, ஒல்கிக் களைஞரும் இல் வழி, கால் ஆழ்ந்து தேரொடு இள மணலுள் படல் ஒம்பு - முளை நேர் முறுவலார்க்கு ஒர் நகை செய்து. - கலி 98 “புத்தம் புதிய மலர்களை நோக்கிப் போகும் வண்டைப் போன்று நீ புதிய பரத்தையரைத் துய்ப்பதற்கு விரும்பினாய். ஆதலால் அப் பரத்தையரைக் கொண்டு வருவதற்கு அவர்கள் இருக்கும் இடந்தோறும் ஓடிப் போய் அவர்களைக் கொண்டு வருகின்றாய். ஆகையால் எப்போதும் பூட்டப்படும் குதிரையை உடைய திண்ணிய தேர் ஆரவாரித்த தெருக்கள் எல்லாம்.