பக்கம்:அன்பொடு புணர்ந்த ஐந்திணை (மருதம்).pdf/246

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தொகை - வகை - உரை : த. கோவேந்தன்

245


அதைக் கேட்ட தலைவன், “தொடியை உடையவளே! தப்பாத வாட்படையையும் கழற் காலையும் உடைய பாண்டி யனின் வையையாற்றில் வந்த புதிய நீரில் ஆடுதற்குத் தங்கிய விதத்தைச் சொல்லால் உனக்குத் தெளிவித்துப் பின் தெய்வத் தால் தெளிவிப்பேன். நான் செய்யாதவற்றைப் பெரிதாகச் சொல்வது உனக்கு என்ன பயனைத் தரும்?” என்றான்.

“மிக்க மலரைச் சூடின பொய்யை உடைய புதிய நீரைப் பலகாலும் ஆடவேண்டித் தேரொடு செல்லும் போது நேர் ஒத்து முளைத்த பற்களை உடையவர்க்கு ஒரு சிரிப்பை உண்டாக்கி ஏற்படுத்தி நின்னைப் பிடித்துக் கரையேற விடுபவர் இல்லாத காலத்தில், இளமணலில் கால் நிலை தளர்ந்து அகப்பட்டுக் கொள்வதினின்று உன்னைப் பாதுகாத்துக் கொள்வாயாக!” என அவனை நெருங்கிச் சொன்னாள் தலைவி.

256. அருள்செய் துன்பப்படுபவளுக்கு நறவினை வரைந்தார்க்கும் வரையார்க்கும், அவை எடுத்து, அற வினை இன்புறுஉம் அந்தணர் இருவரும் திறம் வேறு செய்தியின் நூல் நெறி பிழையாது, குழவியைப் பார்த்து உறுTஉம் தாய் போல், உலகத்து மழை சுரந்து அளித்து ஒம்பும் நல் ஊழி யாவர்க்கும் பிழையாது வருதல் நின் செம்மையின் தர, வாய்ந்த இழை அணி கொடித் திண் தேர், இன மணி யானையாய்! அறன் நிழல் எனக் கொண்டாய், ஆய் குடை அக் குடைப் புற நிழற்கீழ்ப் பட்டாளோ, இவள்? இவண் காண்டிகாபிறை நுதல் பசப்பு ஊரப் பெரு விதுப்பு உற்றாளை! பொய்யாமை நுவலும், நின் செங்கோல் அச் செங்கோலின் செய் தொழில் கீழ்ப் பட்டாளோ, இவள்? இவண் காண்டிகாகாம நோய் கடைக்கூட்ட வாழும் நாள் முனிந்தாளை ஏமம் என்று இரங்கும், நின் எறி முரசம், அம் முரசின் ஏமத்து இகந்தாளோ, இவள்? இவண் காண்டிகாவேய் நலம் இழந்த தோள் கவின் வாட இழப்பாளை! ஆங்குநெடிது சேண் இகந்தவை காணினும், தான் உற்ற