தொகை - வகை - உரை : த. கோவேந்தன்
247
கண் நெடிதாக நீங்கின பொருள்களைக் காணினும் தன்னிடத்தே ஏற்பட்ட வடுவைப் பிறர் காட்டவும் காணாத தன்மை கொண்டது. அத் தன்மையாய், என் தோழியின் தொடிகள் கழன்று சுழலும்படியாக நீ விட்ட கொடுமையை நீ கடிது என்று உணராதிருத்தல் உனக்குச் சான்றோரால் விலக்கப்பட்டவற்றுள் ஒன்றோ? அஃது இல்லையே” என்றாள்
தோழி.
257. அழகு இழந்தவளுக்கு நீயே அருள்வாய் ஈண்டு நீர்மிசைத் தோன்றி இருள் சீக்கும் சுடரே போல், வேண்டாதார் நெஞ்சு உட்க, வெரு வந்த கொடுமையும், நீண்டு தோன்று உயர் குடை நிழல் எனச் சேர்ந்தார்க்குக் காண் தகு மதி என்னக் கதிர் விடு தண்மையும், மாண்ட நின் ஒழுக்கத்தான், மறு இன்றி, வியன் ஞாலத்து யாண்டோரும் தொழுது ஏத்தும் இரங்கு இசை முரசினாய்! ‘ஐயம் தீர்ந்து யார்கண்ணும் அருந் தவ முதல்வன் போல் பொய் கூறாய் என நின்னைப் புகழ்வது கெடாதோதான்நல்கி நீ தெளித்த சொல் நசை எனத் தேறியாள் பல் இதழ் மலர் உண்கண் பனிமல்கக் காணுங்கால்? கரந்த வான் பொழிந்தற்றா, சூது நின்று யாவர்க்கும் இரந்தது நசை வாட்டாய் என்பது கெடாதோதான்கலங்கு அஞர் உற்று, நின் கமழ் மார்பு நசை இலாள் இலங்கு கோல் அவிர் தொடி இறை ஊரக் காணுங்கால்? ‘உறைவரை நிறுத்த கோல், உயிர் திறம் பெயர்ப்பான் போல் முறை செய்தி என நின்னை மொழிவது கெடாதோதான்அழிபடர் வருத்த, நின் அளி வேண்டிக் கலங்கியாள் பழி தபு வாள் முகம் பசப்பு ஊரக் காணுங்கால்? ஆங்குதொல் நலம் இழந்தோள், நீ துணை எனப் புணர்ந்தவள்; இன் உறல் வியன் மார்பl இனையையால்; கொடிது என, நின்னை யான் கழறுதல் வேண்டுமோ, என்னோர்கள் இடும்பையும் களைந்தீவாய் நினக்கே?
- கலி 100