24
அன்பொடு புணர்ந்த ஐந்திணை - மருதம்
கண்கள் பசப்பு அடையாமையை நாம் பெற்றால் அவளை மறந்து நினைப்பதே அல்லாது அமைந்திருந்தலும் நமக்கு இயலும், அவை விரைவாகப் பசத்தலால் அன்றே நாம் அவனை இன்றியமையேம் ஆகின்றோம்” என்று தோழியை நோக்கிக் கூறினாள்.
37. நீங்குவதில் வல்லன்
அம்ம வாழி, தோழி! மகிழ்நன் நயந்தோர் உண்கண் பசந்து, பனிமல்க வல்லன் வல்லன் பொய்த்தல்; தேற்றான், உற்ற சூள் வாய்த்தல்லே. - ஜங் 37 காதற் பரத்தை “Gmp! கேள், மகிழ்நன் தான் செய்த சூள் பொய்க்காத வகையில் ஒழுகுவதைத் தெளியான் ஆயினும், தன்னைக் காதலித்தவருடைய உண்கண் பசந்து நீர்த்துளி சொரியும் வண்ணம் அந்தக் குளுறவைப் பொய்த்து விட நீங்குவதில் வல்லவனாக உள்ளான்” என்றாள்.
38. யாம் வருந்தினோம் அம்ம வாழி, தோழி! மகிழ்நன் தன் சொல் உணர்ந்தோர் அறியலன் - என்றும் தண் தளிர் வெளவு மேனி, ஒண் தொடி முன்கை, யாம் அழப் பிரிந்தே. - ஐங் 38 பரத்தை, “தோழியே! கேள்! குளிர்ந்த மாந்தளிர் போன்ற மேனியும் ஒளியுடைய தொடி அணிந்த முன்கையும் உடைய யாம் ஆற்ற மாட்டாமல் அழும்படி பிரிய எண்ணுவதால், மகிழ்நன், தான் தெளிவிக்கக் கூறுவனவற்றைத் தெளிந்து அமைதி பெறும் உரிமை மங்கையரின் அன்பை அறிகின்ற அறிவு இல்லாதவன் ஆவான்!” என்று தன் தோழியை நோக்கிக் கூறினாள். ஆதலால் அறியாதவர் செய்யும் செயலைச் செய்ய வேண்டா!
39. நெஞ்சில் பிரியலன்
அம்ம வாழி, தோழி! ஊரன் வெம் முலை அடைய முயங்கி, நம் வயின்