பக்கம்:அன்பொடு புணர்ந்த ஐந்திணை (மருதம்).pdf/251

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

250

தி. அன்பொடு புணர்ந்த ஐந்திணை - மருதம்

அணிஅணி ஆகிய தாரர் கருவியர் அடு புனல் அது செல அவற்றை இழிவர். கைம்மான் எருத்தர் கலி மட மாவினர். நெய்ம் மாண் சிவிறியர் நீர் மணக் கோட்டினர், வெண் கிடை மிதவையர் நன் கிடைத் தேரினர், சாரிகை மறுத்துத் தண்டா உண்டிகை ஒர் இயவு உறுத்தர ஊர்ஊர்பு இடம் திரீஇச் - சேரி இளையர் செல அரு நிலையர் வலியர் அல்லோர் துறைதுறை அயர மெலியர் அல்லோர் விருந்து புனல் அயர சாறும் சேறும் நெய்யும் மலரும் நாறுபு நிகழும் யாறு வரலாறு நாறுபு நிகழும் யாறு கண்டு அழிந்து வேறுபடு புனல் என விரை மண்ணுக் கலிழைப் புலம் பரி அந்தணர் கலங்கினர் மருண்டு மாறு மென் மலரும் தாரும் கோதையும் வேறாம் தூரும் காயும் கிழங்கும் பூரிய மாக்கள் உண்பது மண்டி நார் அரி நறவம் உகுப்ப நலன் அழிந்து வேறாகின்று இவ் விரி புனல் வரவு என சேறு ஆடு புனலது செலவு. வரை அழி வால் அருவி வாதாலாட்ட கரை அழி வால் அருவி கால் பாராட்ட இரவில் புணர்ந்தோர் இடைமுலை அல்கல் புரைவது பூந் தாரான் குன்று எனக் கூடார்க்கு உரையோடு இழிந்து உராய் ஊரிடை ஒடிச் சலப் படையான் இரவில் தாக்கியது எல்லாம் புலப்படப் புன்அம் புலரியின் நிலப்படத் தான் மலர்ந்தன்றே தமிழ் வையைத் தண்ணம் புனல். விளியா விருந்து விழுவார்க்குக் கொய்தோய் தளிர் அறிந்தாய், தாம் இவை பணிபு பசி ஒண்பபண்டெல்லாம் நனி உருவத்து