தொகை - வகை - உரை : த. கோவேந்தன்
251
என்னோ துவள் கண்டி. எய்தும் களவு இனி நின் மார்பின் தார் வாடக் கொய்ததும் வாயாளோ கொய் தழை கை பற்றிச் செய்ததும் வாயாளோ செப்பு. புனை புணை ஏறத் தாழ்த்ததை தளிர் இவை நீரின் துவண்ட சேஎய் குன்றம் காமர் பெருக்கு அன்றோ வையை வரவு. ஆம்ஆம் அது ஒக்கும் காதல் அம் காமம் ஒருக்க ஒரு தன்மை நிற்குமோ ஒல்லைச் சுருக்கமும் ஆக்கமும் சூள் உறல் வையைப் பெருக்கு அன்றோ பெற்றாய் பிழை. அருகு பதியாக அம்பியின் தாழ்ப்பிக்கும் குருகு இரை தேரக் கிடக்கும்பொழி காரில் இன் இளவேனில் இது அன்றோ, வைவை நின் 6U}6).J6)ll I 6 JULLDITE 6}6).J. செல் யாற்றுத் தீம் புனலில் செல் மரம் போல வவ்வு வல்லார் புணை ஆகிய மார்பினை என்னும் பணியாய் இரவெல்லாம் வைகினை வையை உடைந்த மடை அடைத்தக்கண்னும் பின்னும் மலிரும் பிசிர் போல இன்னும் அனற்றினை துன்பவிய நீயடைந்தக் கண்ணும் பனித்துப் பணி வாரும் கண்ணவர் நெஞ்சம் கனற்றுபு காத்தி வரவு. நல்லாள் கரை நிற்ப நான் குளித்த பைந் தடத்து நில்லாள் திரை மூழ்கி நீங்கி எழுந்து ஏற்று யான் கொள்ளா அளவை எழுந் தேற்றாள் கோதையின் உள் அழுத்தியாள் எவளோ தோய்ந்தது யாது என தேறித் தெரிய உணர் நீ பிறிதும் ஒர் யாறு உண்டோ? இவ் வையை யாறு இவ் வையை யாறு என்ற மாறு என்னை கையால் தலை தொட்டேன் தண் பரங்குன்று. சினவல் நின் உண்கண் சிவப்பு அஞ்சுவாற்குத் துனி நீங்கி ஆடல் தொடங்கு துணி நனி