252
அன்பொடு புணர்ந்த ஐந்திணை - மருதம்
கன்றிடின் காமம் கெடுஉம் மகள் இவன் அல்லா நெஞ்ச முறப்பூட்டக் காய்ந்தே வல் இருள் நீயல் அது பிழையாகும் என இல்லவர் ஆட இரந்து பரந்து உழந்து வலலவா ஊடல உணாததர நலலாய களிப்பர் குளிப்பர் காமம் கொடி விட அளிப்பதுணிப்ப ஆங்காங்கு ஆடுப ஆடுவார் நெஞ்சத்து அலர்ந்து அமைந்த காமம் வாடற்க வையை நினக்கு, - நல்லந்துவனார் பரி பா. 6 முகில்கள் நீர் நிறைந்த கடலில் இருக்கும் நீரை முகந்து கொண்டு வானில் எங்கும் பரவின, நீர் நிறைதலால் துளும்பும் தம் சுமை தீர்ந்து இளைப்பாறும் பொருட்டுப் பெய்பவை போல் மழை பொழிந்தன. அதனால் மிக்க நீர் ஊழிக் காலத்தில் நிலத்தை மூடப் பெருகுவது போன்று பெருகி, இடந்தோறும் கூடி, மலையில் வாழும் மான் கூட்டம் முதலிய உயிரினம் கலங்குமாறும், மயில்கள் களித்து அகவ வும், மலைகள் மீது படிந்துள்ள அழுக்குகள் நீங்கும்படி விரையும் அருவியாய் விழுகின்றது வெள்ளம். அது ஒடுதற் குரிய வரிகள் பற்பல பொருந்திய மலைச் சாரலில் குளிர்ந்த அழகிய அந் நீர், குற்றம் இல்லாத நூற் கேள்வியைக் கொண்ட நல்லிசைப் புலவர்கள் புகழும் அறிவையுடைய தம் நாவால் பாடிய நல்ல செய்யுள்கள் பொய்படாமல் நிலை நிற்கச் செய்ய எங்கும் போய்ப் பரவி உழவு முதலிய தொழில்கள் பெருகும்படி தாவிச் சென்றது.
அந்த வெள்ள நீர் வையையாற்றில் வந்த வருகையில் புது நீரில் ஆடுவதற்கு விரும்பினர் மகளிர். தம் கூந்தலைப் புலரச் செய்வதற்குரிய அகில் மரம் முதலிய புகைப்பதற்குரியவையும், அணிந்து கொள்வதற்குரிய மலர்களும், வையை யாற்றுக்கு வழிபாடு செய்தற்கு உரியவையும், பொன்மீன், பொன் நண்டு முதலிய பற்பல பொருள்களையும் எடுத்துக் கொண்டனர். தம் மகிழ்ச்சி பொருந்திய கணவன் மாரைத் திருநாளுக்கு உரிய அணிகள் ஆடைகள் ஆகியவற்றை அணியச் செய்யும் இம்முறை பொருந்தியது.