பக்கம்:அன்பொடு புணர்ந்த ஐந்திணை (மருதம்).pdf/256

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தொகை - வகை - உரை : த. கோவேந்தன்

255


மேற்கொண்டு இந்த விரிந்த நீரின் வருகை நலம் கெட்டு மாறுபட்டது என்று அந்த அந்தணரே அல்லாமல் மற்றவரும் அவ் வையை யாற்றை நீங்கிச் சென்றனர். அக் குழம்பிய நீரின் வரவு இத் தன்மையுடையது.

எல்லை கடந்த இழிகின்ற வெண்மையான அருவி தாலாட்டவும் தடையில்லாமல் செல்லும் தூய்மையானதும் உருவம் அற்றதும் ஆன தென்றற்காற்று பாராட்டவும் இரவுக் குறியில் தலைவியைக் கண்டு கூடிய தலைவர் அத் தலைவியின் முலையிடைக் கிடந்து இன்துயில் கொள்வதற்குக் கடப்ப மாலையை அணிந்த முருகப் பெருமானின் திருப்பரங்குன்றம் பொருத்தமானது என்று இவ்வாறு எண்ணி அங்குச் செல்லாத மாந்தர்க்குக் கூறும் தொழிலுடன், இழிந்து பரவி மதுரைத் தெருக்களின் இடையே ஒடி வஞ்சனை செய்யும் மலர் அம்புகளையுடைய காமன் இரவு நேரத்தில் மகளிரையும் மைந்தரையும் மோதியவை எல்லாம் புலனாகும் படி மகளிர் ஊடல் கொண்டு அறுத்து எறிந்த மாலை முதலியவற்றை வாரிக் கொணர்வதால் யாவர்க்கும் புலப்படச் செய்து பொலி வற்ற வைகறைப் பொழுதில் தெருக்கள் யாவும் வறுநிலமாகும் படி பரந்தது. தமிழையுடைய வையை ஆற்றில் வந்த அழகிய புதுநீர் இத் தன்மையுடையது என்று அந் நீரில் ஆடிய தலை வன் தன் காதல் பரத்தைக்குச் சொன்னான்.

மேற்கண்டவாறு தலைவன் காதற் பரத்தையிடத்துக் கூறினான். காதற்பரத்தை அதைக் கேட்டு ஊடல் கொண்டு அவனைப் பழித்து ஊடல் கொண்டாள். அவன் அவளது ஊடலைத் தீர்க்க முயன்றான்.

“நீ அழைக்கப்படாத விருந்தினனாய்ச் சென்றாய் நின்னை விரும்பும் மகளிர்க்காகவே இத் தளிரைக் கொய்தாய். எனக்காக இத் தளிரைக் கொய்யவில்லை” என்று காதற் பரத்தை உரைத்தாள்.

அதைக் கேட்டான் தலைவன். “நீ நன்கு அறிந்தாய். இவை பிற மங்கையர்க்குக் கொய்தவை! உண்மையே!” என்றான் அவன்.

அதைக் கேட்ட காதற்பரத்தை “பணிவான சொற்களைச் சொல்வாயேனும் முறிந்த அன்பை உடையவனே, இச் செய