256
அன்பொடு புணர்ந்த ஐந்திணை - மருதம்
லால் இப்போது நின் கணவொழுக்கம் எனக்குப் புலப்படு கின்றது. முன்பு எனக்குக் கொய்து வந்த தளிர் எல்லாம் விரைவில் நீ வருதலால் அத் தளிரின் உருவம் துவளாது. ஆனால் இத் தளிரோ மிகவும் துவண்டுள்ளது பார்! இதற்குக் காரணம் நீ இது பிறிது ஒருத்திக்குக் கொய்து கொண்டு போய் அவளுக்குத் தர அவள் அதனை மறுக்க அதனால் காலம் நீட்டித்தமையே! அதில்லையேல் வேறு என்ன? கூறுக. “இனி அந்தப் புதியவள் தன் நின் மார்பில் அணிந்த மாலை வாடும்படி நெடிது நின்று இத் தளிரைக் கொய்வதற் கேனும் நினக்கு இசைய வில்லையோ! இவ்வாறு பறிக்கப் பட்ட இந்தத் தழையைக் கையுறையாகக் கொண்டு போய் அவளடியில் வீழ்ந்து வணங்கியிருப்பாயே! அதற்காகவேனும் அவள் நினக்கு இசைய வில்லையோ! ஏன் விழிக்கின்றாய்? சொல்!” என்றாள்.
அதைக் கேட்ட அத் தலைவன், “வையை ஆற்றில் புதுப் புனல் வருகை அழகான பெருக்கன்றோ. அதனால் அழகிய கட்டு மரத்தில் ஏறி ஆற்றைக் கடத்தற்குக் காலம் தாழ்த்தது. ஆதலால் அந்த வையை நீர் காரணமாக இவை துவண்டன. யான் முருகப் பெருமானின் திருப்பரங் குன்றத்தின் மீது ஆணையாக இதைச் சொல்கின்றேன்” என்றான்.
“ஆம் ஆம்! நீ கூறுவதும் பொருந்தும். காதலையுடைய அழகிய காமமும் ஒருமிக்க ஒரே தன்மை கொண்டதாய் இருத்தல் உண்டோ? சிலரிடம் விரையச் சுருங்கும். சிலரிடம் பெருகும். அதனால் இந்த வையை ஆற்றினது நீர்ப் பெருக்கை அக் காமம் ஒத்ததாய் உள்ளது. நீ தேவையற்றுச் சூள் கூறிப் பிழை செய்தாய். இனி இத்தகைய சூள் உரைக்காதே.
“வானம் பெய்யும் கார்காலத்தில் எம் ஊர், உம் ஊர்க்கு அருகிலியிருக்க, தெப்பம் காரணமாக நின்னைத் தாழ்ப்பிக்கும் இன்னிளவேனிலில் குருகுகள் இரை தேடும் அளவில் நீர் வற்றிக் கிடக்கும் இத்தகைய இயல்வு கொண்டது அன்றோ வையை யாறு? அதனால் நின் காமத்தையும் வையை ஆறு அழித்ததாக எண்ணுவாய்!” என்றாள்.
“தனக்கு என இயக்கம் இல்லாது இனிய புனலில் அந் நீர் ஒடும் மரம் போல் நின்னைக் கவர்ந்து கொள்வதில்