பக்கம்:அன்பொடு புணர்ந்த ஐந்திணை (மருதம்).pdf/258

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தொகை - வகை - உரை : த. கோவேந்தன்

257


வல்ல மங்கையர் இயக்கிய வழியே இயங்கினை அம் மங்கையர் நீராடும் தெப்பமான மார்பையும் உடையை! அவ்வாறு இருத்தற்கு ஒரு சிறிதும் அஞ்சாமலும் இரவுப் பொழு தெல்லாம் அவளோடு தங்கினாய்! இந்த வையை ஆற்றில் உடைந்த மடையை அடைந்த போதும் மீண்டும் ஒழுகும் ஊற்று நீர். அது போல் முன்னே உண்டான துன்பம் நீங்கும் படி நீ அவரிடம் தங்கியிருந்தாய். என்றாலும் நினது பிரிவால் நீர் ஒழுகும் கண்ணையுடைய இம் மங்கையர் நெஞ்சத்தைப் பின்னரும் வருந்தும்படியாச் செய்து இப்படி என்னிடம் வந்தனை. இனி இங்ஙனம் வரவேண்டா” இப்படிக் காதற் பரத்தை சொன்னாள்.

“ஏடி! நான் ஒரு நீர்நிலையில் நீராடினேன். அந் நீர் நிலையின் கரையில் அழகியவள் நின்றிருந்தாள். அங்ஙனம் நின்றிருந்தவள் தன் அறியாமையால் கரையிலேயே நில்லாத வளாய் அக் குளத்தில் பாய்ந்து ஆழ்ந்தாள். பின்பு மேலே எழுந்தாள். அதனால் அவள் காம நுகர்வு அறியாத இளமை .யுடையவள் என அறிந்து கொள்வாய். அவளையே அல்லாமல் என் மார்பில் மாலை போல முயங்க முனைந்தவள் யாவள்? நான் அவளைத் தழுவிய ஆறுதான் எதுவோ?’ என்று கூறினான். அதன் மேல் பரத்தை உரைக்கத் தொடங்கினாள்.

அவள் கூறியதைக் கேட்டான் அத் தலைவன். “யான் குளம் ஒன்றில் குளித்தேன். அங்கன்மிருக்க நீ இந்த வையை யாற்றில் தான் ஆடினாய் என்று மாறுபட்டுப் பேசுகின்றாய். என்ன காரணமோ, இதன் மேலும் நீ ஐயம் கொள்வாயா யின் முன்னம் சூள் உரைத்தது போல் மீண்டும் திருப்பரங் குன்றின் தலையைத் தொட்டுக் கூறுகின்றேன்” என்று சொன்னான்.

தலைவனும் காதல் பரத்தையும் இங்ஙனம் முரண்பட்டுப் பேசிக் கொண்டதைக் காதல் பரத்தை வீட்டில் இருந்த முதிய பெண்டிரில் ஒருத்தி காதற் பரத்தை ஊடியதைக் கடிந்து உரைத்துத் தணியச் செய்தாள். தலைவன் அக் காதற் பரத்தையைக் கூடிக் களித்தான்.

இச்செய்தியை எல்லாம் தலைவி அறிந்தாள். ஆதலால் தலைவன் பொருட்டாகத் தன்னிடம் தூதாய் வந்த விறலி