பக்கம்:அன்பொடு புணர்ந்த ஐந்திணை (மருதம்).pdf/259

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

258

அன்பொடு புணர்ந்த ஐந்திணை - மருதம்


யிடம் கூறி இத்தகையவனை இனிமேல் தான் ஏற்க இயலாது என்று மறுத்துக் கூறினாள்.

இவ்வாறு ஊடி நின்ற காதற்பரத்தையின் வீட்டில் உள்ள முதுபெண்டிர் அவளை நோக்கி “நீ இப்படிச் சினம் கொள்ளாதே! தலைவனோ நின் மை பூசப்பட்ட கண் சிவந்தாலே அதற்குப் பெரிதும் அஞ்சுகின்றான். அவ்வாறு அஞ்சுபவனிடம் நீ ஊடல் நீங்கி அவனுடன் விளையாடு வதைத் தொடங்குவாயாக! அவ்வாறின்றி நீ தலைவனின் இயல்பை உணராமல் ஊடலில் மிகுவாயாயின் அவன் காம இன்பம் பதனழிந்து கெடும். நீயோ பெண் மகள். இத் தலைவனின் சுழலும் நெஞ்சம் இறுக்கமாகப் பூட்டிக் கொள்ளும்படி சினந்து நின்னை விட்டுப் பிரிந்து நீங்குவது உறுதியாம். பின்பு இவனைத் தேடிக் கொண்டு இருள் மிக்க இரவில் செல்ல நேரும். ஆகவே நீ அவ்வாறு செல்வதை ஒழிவாய். அங்ஙனம் இருளில் செல்வது இடம் அறிந்து ஊடி இனிதாய் உணரும் ஒழுக்கத்துக்குப் பிழையாகும்” என்று கூறித் தேற்றுதலானும் ஊடல் உணர்ந்த வல்ல வாயில்களும் இரந்து சொல்லியும் அந்த இருவரும் கூடும்படி ஊடலைத் தணித்தலானும் விறலியே அந்த இருவரும் கள்ளுண்டு களிப்பர்; வையை யாற்றில் நீராடுவர். காம இன்பம் மிகும் படி ஊடிக் கொள்வர். ஊடல் சிறிது மிக்கவுடன் அது தணிந்து கூடுவர். அங்கங்கே போய் விளையாடுவர்.

வையை ஆறே! நீ நின்னிடம் நீராடுபவரின் மனத்தில் பெருகிப் பொருந்திய இத்தகைய காமத்தை உண்டாக்குகின்ற தன்மை நின்னிடம் என்றும் குறையாதாகுக.

களிப்பூட்டிய கண்ணும் கள்ளும் திரை இரும் பனிப் பெளவம் செவ்விதா அற முகத்து, உர உரும் உடன்று ஆர்ப்ப ஊர் பொறை கொள்ளாது, கரை உடை குளமெனக் கழன்று வான் வயிறு அழிபு வரைவரை தொடுத்த வயங்கு வெள் அருவி இரவு இருள் பகலாக இடம் அரித செலவு என்னாது, வலன் இரங்கு முரசின் தென்னவர் உள்ளிய, நிலன் உற நிமிர் தானை நெடு நிரை நிவப்பு அன்ன,