பக்கம்:அன்பொடு புணர்ந்த ஐந்திணை (மருதம்).pdf/261

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

260

தி. அன்பொடு புணர்ந்த ஐந்திணை - மருதம்

வரை புரை உருவின் நுரை பல சுமந்து பூ வேய்ந்து பொழில் பரந்து துணைந்து ஆடுவார் ஆய் கோதையர் அல்ர் தண் தாரவர் காதில் தளிர் செரீஇ கண்ணி பறித்துக் கை வளை ஆழி தொய்யகம் புனை துகில் மேகலை காஞ்சி வாகுவலயம் எல்லாம் கவரும் இயல்பிற்றாய் தென்னவன் ஒன்னார் உடை புலம் புக்கற்றால் மாறு அட்ட தானையான் வையை வனப்பு. புரிந்த தகையினான் யாறு ஆடுவாருள் துரந்து புனல் துவத் துர மலர்க் கண்கள் அமைந்தன ஆங்கண் அவருள் ஒருத்தி கை புதைஇய வளை - ஏக்கழுத்து நாணான் கரும்பின் அணை மென் தோள் போக்கிச் சிறைப்பிடித்தாள் ஒர் பொன் அம் கொம்பு பரிந்து அவளைக் கைப் பிணை நீக்குவான் பாய்வாள் இரும்பு ஈர் வடி ஒத்து மை விளங்கும் கண் ஒளியால் செம்மைப் புதுப் புனல் சென்று இருளாயிற்றே வையைப் பெருக்கு வடிவு. விரும்பிய ஈரணி மெய் ஈரம் தீர, சுரும்பு ஆர்க்கும் சூர் நறா ஏந்தினாள் கண் நெய்தல் பேர் மகிழ் செய்யும் பெரு நறாப் பேணியவே கூர் நறா ஆர்ந்தவள் கண். கண் இயல் கண்டு ஏத்திக் காரிகை நீர் நோக்கினைப் பாண் ஆதரித்துப் பல பாட அப்பாட்டுப் பேணாது ஒருத்தி பேதுற ஆயிடை என்னை வருவது எனக்கு என்று இணையா நன் ருெமர் மார்பன் நடுக்குற நண்ணிச் சிகை கிடந்த ஊடலின் செங் கண் சேப்பு ஊர, வகை தொடர்ந்த ஆடலுள் நல்லவர் தம்முள் பகை தொடர்ந்து கோதை பரியூஉ நனி வெகுண்டு யாறு ஆடு மேனி அணி கண்ட தன் அன்பன்