தொகை - வகை - உரை : த. கோவேந்தன்
261
சேறு ஆடு மேனி திருநிலத்து உய்ப்பச் சிரம் மிதித்துத் தீர்விதாகச் செரவுற்றாள் செம் புனல் ஊருடன் ஆடுங்கடை
புரி நரம்பு இன் கொளைப் புகல் பாலை ஏழும் எழுஉப்புணர் யாழும் இசையும் கூடக் குழல் அளந்து நிற்ப முழவு எழுந்து ஆர்ப்ப மன் மகளிர் சென்னியர் ஆடல் தொடங்கப் பொருது இழி வார் புனல் பொற்புஅஃது உரும் இடி சேர்ந்த முழக்கம் புரையும் திருமருத முன்துறை சேர் புனற்கண் துய்ப்பார் தாமம் தலை புனை பேஎம் நீர் வையை நின் பயம் பாடி விடிவுற்று ஏமாக்க நின் படிந்து நீங்காமை இன்று புணர்ந்தெனவே.
- மையோடக் கோவனார் பரி பா 7 முகில்கள், அலைகளையும் குளிர்ச்சியையும் உடைய கரிய கடல் வற்றுமாறு நன்கு நீரை மொண்டு வன்மை கொண்ட இடியானது ஆரவாரம் செய்தன, தம் மீது ஏறிய பாரம் தாங்க மாட்டாமல் தம் வயிறு கிழிந்ததால் கரை உடையும் குளம் போல் சைய மலையின் முகடுகள் தோறும் தொடுக்கப் பட்டு விளங்கும் அருவிநீர். அது மழையால் பொலிவு அடைந்து மற்ற நீருடன் கூடி வையை ஆற்றில் நீர் பெருகி வெள்ளமாக உயிர்களுக்கு எல்லாம் மிகுமாறும் மருதநிலம் அழகுறு மாறும், குறிஞ்சி முதலிய வன்புலங்கள் வளம் பெருகுமாறும் ஒடி வந்தது. மன்னர் வெற்றி கொள்ள எண்ணி நாட்டை அடைதற்கு நிமிர்ந்து போகும் பாண்டி யரின் படை பெரிய அணியின் எழுச்சியைப் போல் அவ்வாறு செல்கின்றது அது யான் போகும் இடம் அடைவதற்கு அரியது என எண்ணுவதில்லை. இரவு பகல் என்று கருதாம லும் அஃது ஒடி வந்தது.
அந்த ஆற்று வெள்ளம் கருமையான சோலைகளில் உள்ள நரந்தம் புற்களின் மேலே பரவியது. விளங்கும் கிளை களையுடைய வேங்கை மரத்தின் மலர்ந்த பூங்கொத்தினின் றும் உதிர்ந்த மலர்களுடன் கூடி மழையில் அலைக்கப் பட்ட