262
அன்பொடு புணர்ந்த ஐந்திணை - மருதம்
அடைவதற்கு அரிய மலையுச்சிகள் தோறும் உள்ளன. காற்றினால் வளைக்கப்பட்டு முறிந்த கொம்புகளை உடைய பெருமரங்களை வேருடன் அகழ்ந்து தள்ளி உருட்டிக் கொண்டு வந்து, வெள்ளம் குறிஞ்சி நிலத்திலும் முல்லை நிலத்திலும் உள்ள பொருள்களை வாரிக் கொண்டு வந்து மருத நிலத்திலும் நெய்தல் நிலத்திலும் பரப்பியது.
உழவுத் தொழில் செய்பவர் மகிழ்ச்சி அடைய, முழவு களும் பெரும்பாறைகளும் ஒலிக்கக், கூத்தின் இயல்பை அறியாத ஆடல் மகள் தாறுமாறாக நடப்பது போலவும், இடம் அறிந்து ஊடல் கொண்டு இனிதின் உணர்வதான ஊடல் இயல்பை அறியாத உவகையள் செருக்காக நடப்பது போலவும் தான் வேண்டிய இடம் எல்லாம் சென்றது; தடை செய்கின்ற அணையை உடைத்துக் கொண்டு போனது. நூல் விதிப்படி செய்யப்பட்ட உடம்பில் பூசுவதற்கான கலவையின் நறுமணம் போல் நறுமணப் பொருள்கள் பலவற்றைக் கூடிய தால் பொதுவாய் மணக்கும் மணத்தை உள்ளே வைத்துக் கொண்டு அந்தச் செம்மை நிறம் உடைய வெள்ள நீர் தன் மீது புதிய நறுமணத்தைப் பெற்றது.
ஒரு பக்கத்தில் குளம் வெள்ள நீர் பாய்ந்து புகுந்த நீரால் பெருகிச் செங்கழுநீரின் மலர்ந்த மலர்கள் முழுகி விடும்படி பெருகி வந்தது என்று சிலர் கூறினர். ஒரு பக்கத்தில் இளைய பெண்கள் தாம் மணல் மீது செய்த பாவையை நீர் அழித்து விட்டது என்று கூறி அழுதனர். ஒரு பக்கத்தில் வயலில் விளைந்த முற்றிய இளநெல் மீதும் அரிந்து குவித்து வைத்த குவியல் மீதும், வெள்ளம் பெருகிப் பாய்ந்தது என்று அவற்றைப் பாதுகாக்கும் பொருட்டு துடிகளை முழக்கினர்.
ஒரு பக்கத்தில் கடலே பெருகி வந்து ஊரை வளைந்து கொண்டது என்று மக்கள் ஆரவாரம் செய்தனர். ஒரு பக்கத்தில் முகில் துளிப்பதற்குரிய சிறிய துளைகள் உடைந்து பெரிய ஒட்டையாயிற்றோ! என்று சிலர் கூறினர். இவ்வாறு நிகழ, ஒரு பக்கத்தில் பாணர்கள் குடியிருந்த பாக்கத்தை வெள்ளம் கவர்ந்து கொண்டது எனக் கூக்குரல் எழுந்தது. ஒருபக்கத்தில் கூத்தர் குடியிருந்த சேரியை வெள்ளநீர் வளைந்து கொண்டது என்று ஒருபக்கத்தில் ஆரவாரம்