பக்கம்:அன்பொடு புணர்ந்த ஐந்திணை (மருதம்).pdf/264

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தொகை - வகை - உரை : த. கோவேந்தன் இ 283 எழுந்தது. ஒரு பக்கத்தில் ‘வெள்ளநீர் கமுகு தென்னை ஆகிய வற்றின் கழுத்தை முட்டப் பெருகியது அதனால் வயல்களில் வாழும் வாளைமீன் அவற்றின் பாளையைத் தின்னுகின்றன. என்று வியந்து உரைத்தனர். ஒரு பக்கத்தில் உழவர் ‘எம் நாற்றங்கால் வெள்ளத்தால் வண்டலிடப்பட்டு மேடாயிற்றே!’ என்று வருந்தினர். ஊடலைத் தான் நீக்க முயல நீங்காத மகளி ரைக் கூட்டுவித்தற்கு முயலும் கணவரின் ஆசை வெள்ளத்தைப் போல், பெருகி விரைந்து பாய்ந்த நீரில், வயல் தொழிலை யுடைய வேளாளர், கரு முதிர்ச்சி அடைந்த வாளை மீனைப் போல், விலாப் பருக்கவுண்டு தம் சுற்றத்தாரோடும் கூடித் தம் தொழிலைச் செய்யும் பொருட்டுப் பரவிச் சென்றனர்.

நீரால் மோதுண்டு அடிப்பாகம் இடிந்த மலைகளைப் போல் விளங்குவன இரு கரைகள். வெள்ளிப் பனிமலையின் முடிகளைப் போன்ற வடிவம் கொண்டு நுரை பலவற்றையும் சுமந்து கொண்டு வெள்ளம் ஓடியது. மலரால் மூடப்பட்டுச் சோலைகளின் இடையே பரவி ஓடியது. ஒடிய வெள்ள நீரானது தன்னிடத்தில் ஆராய்ந்து தொடுத்த மாலையை யுடைய மகளிரின் காதுகளின் தளிரைச் செருகியது. மலர்ந்த குளிர்ந்த மாலை அணிந்த ஆடவரின் தலையில் சூடிய மாலைகளைப் பறித்தது. மங்கையரின் கையில் அணிந்த வளை யல்களும், தலையில் அணிந்த தலைப்பாளை என்னும் அணியும், உடுத்திய ஆடையும் அந்த ஆடையின் உள்ளே அணியப்படும் மேகலை என்ற அணிகலனும், ஆடையின் வெளியே அணியப் படும் காஞ்சி என்னும் அணிகலனும், மைந்தர் உடுத்த ஆடையும், அணிந்த கணையாழிகளும் தோள் வலயங்களும் ஆகியவற்றைக் கவர்ந்து கொண்ட தன்மை உடையதாய் விளங்கியது. பகைவரைக் கொன்ற படையை உடைய பாண்டிய மன்னனின் வையை ஆற்றில் வந்த புதிய வெள்ளத்தின் இயல்பு. பாண்டிய மன்னன் பகைவரின் தோற்றற் குரிய நிலத்தில் புகுந்த இயல்பைப் போல் விளங்கியது.

மகளிர் சிலர் யாவராலும் விரும்பப்படும் அழகை யுடைய பாண்டிய மன்னனின் வையை ஆற்றில் நீராடினர். அம் மகளிருள் சிலர் நீரைத் துவும் துருத்தி, விசிறி கொண்டு மற்றவர் மேல் நீரைப் பாய்ச்சினர். மற்றப் பெண்கள் தூய மலர்