264
அன்பொடு புணர்ந்த ஐந்திணை - மருதம்
போன்ற கண்கள் எல்லாம் அந்த நீரை ஏற்று இமைக்காமல் விளங்கினர். அப்போது அவ் விளையாட்டில் தோற்றுத் தன் கண்களைப் புதைத்தாள் ஒருத்தி. அவ்வாறு கண் புதைத்தவள் வெற்றியால் களித்துத் தன் கழுத்தில் அணிந்த பொன் நானால் தொய்யில் கரும்பு எழுதப்பட்ட அணை போன்ற மென்மையான தோள்களைக் கட்டிச் சிறைப்பிடித்தாள், அதைப் பார்த்தாள் பொற்கொடி போன்ற ஒருத்தி. அப்படி அங்குச் சிறைப் பட்டவளுக்கு இரக்கம் கொண்டு அவளைக் கையால் கட்டினின்றும் விலக்கும் பொருட்டுப் பாய்ந்தாள். அப்படிப் பாய்ந்தவளது மாவடுவைப் போன்று மையால் அழகு பெற்று விளங்கும் கண் பாய்ந்து வருத்துதலால் புதிய அந் நீரின் சிவந்த நிறம் போய் நீல நிறமாக ஆயிற்று. வையை ஆற்றின் புது நீர் வெள்ளத்தின் அழகு இத்தகைய இயல்பு உடையது.
இவ்வாறு விரும்பிய நீராடலுக்கு ஏற்ற ஈர அணியை உடைய உடல் ஈரம் நீங்கி உலர்ந்து வெப்பம் உடையதாகும் பொருட்டு, தலைவி வண்டுகள் மொய்த்து ஆரவாரித்தற்குக் காரணமான கடுப்புடைய கள்ளைக் குடிப்பதற்குக் கையில் எடுத்தாள். அவள் அப்படி எடுத்த போது அவளுடைய கண் நெய்தல் மலரைப் போன்று கறுத்து விளங்கின. மிக்க களிப்பை யுடைய கள்ளை அருந்திய பின்பு அவளுடைய கண்கள் சிவந்தன. அவை பார்ப்பவர்க்கு மகிழ்ச்சியையூட்டும் பெரிய நறவ மலரைப் போல விளங்கின.
அவ்வாறு சிவந்த கண்ணின் அழகைக் கண்டு பாராட்டி அந்தக் கண்களின் அழகிய தன்மையை உடைய நோக்கங் களை இசைப் பாட்டில் அமைத்துப் பாட விரும்பித் தலைவன் பற்பல பாடல்களையும் பாட அப் பாடல்களைக் கேட்ட ஒருத்தி அப் பாடல்கள் பாடுபவன் தன் காதலியைப் பாடும் பாடல்கள் என்பதை அறியாமல் தன்னை விரும்பிப் பாடுகின்ற பாடல் என்று எண்ணி அவனைச் சேரும் கருத்தால் துன்பம் அடைந்தாள். அடைய, அவளது எண்ணத்தை உணர்ந்து விரிந்த மார்பையுடைய தலைவன், இந் நிகழ்வைத் தலைவி அறிந்தாளாயின் எனக்கு எவ் வகைப்பட்ட துன்பம் வருமோ, அறியேன்” என மனம் வருந்தினான். அவ் இடத்தினின்று அகன்று, தலைவியை நெருங்கி அச்சத்தால் உடல் நடுங்கி