தொகை - வகை - உரை : த. கோவேந்தன் & 2”
நின்றான். அங்ஙனம் நிற்ப, முன்னமே குறை பொருந்திய ஊடல் காரணமாகச் சிவந்துள்ள கண்கள் இந் நிகழ்வால் பெரிதும் சிவக்க, வகுப்புப் பொருந்திய அந் நீராட்டில் வந்த மகளிருள் முன்பு பாடல் போற்றாது துன்பம் கொண்ட அவளுடன் தலைவி பகை கொண்டாள். மிகவும் சினந்து தன் மாலையினை அறுத்து எறிந்தாள். அச் சமயத்தில் நீராட்டி னால் பொலிவுற்ற தலைவியின் மேனியது அழகைக் கூர்ந்து நோக்கி நின்ற அவளுடைய காதலன் அவ்வாறு சினந்த தலைவிக்கு அஞ்சினான். சந்தனம் பூசப்பட்ட தனது மேனியை அழகிய நிலத்தில் கிடத்தி வணங்கினான். அதனாலும் அவளது சினம் தீரவில்லை. அத் தலைவனின் தலையில் உதைத்தாள், ஊடல் கொண்டாள். இவ்வாறு ஊரவருடன் கூடி நீராடல் நிகழ்ந்தது. அப்போது,
விருப்புக்குரிய பாலைப்பண் ஏழினையும் புணர்த்தற்குரிய முறுக்குண்ட நரம்பில் இனியதான அறுதியைத் தரும் யாழ் இசையும், மிடற்றுப் பாடலும் தமக்குள் பொருந்த அவற்றின் சுதியை வங்கியம் அளந்து நின்றது. முழவு ஒசை எழுந்து முழங்கியது. அரசனால் தலைக்கோல் என்ற பட்டத்தைப் பெற்ற மகளிரும், பாணரும் கூத்தாடத் தொடங்கினர். இவற்றால் முழக்கம் மிக்கது. அதனுடன் ஒடும் நீர் கரை களை இடித்து ஒழுகுதலால் எழுந்த ஒலியும் சேர்ந்து ஆர வாரித்தது. அத்தன்மை உரும் ஏறாகிய இடியுடன் சேர்ந்த முகில் முழக்கத்தைப் போல் விளங்கியது. இத்தகைய ‘திரு மருத முன்துறை என்ற பெயர் உடைய துறையை அடைந்து ஆடி இன்பம் அடைபவர் மலர் மாலைகளை வாங்கி, நின் தலையிடத்தே சூட்டி மகிழ்வதற்குக் காரணமான அச்சம் தரும் ஆழமான நீரையுடைய வையை ஆறே! யாம் இன்று நின்னிடம் நீராடி நீங்காத இவ் இன்பத்தை, அடைந்தாற் போல் என்றும் நின்னிடம் நீராடி நின்னால் பெறும் இன்பத்தைப் பாடி விடிவு எய்தி மகிழ்ச்சி அடைவோமாக!
கள்ளொடு காமம் கலந்த புனல்
மலைவரை மாலை அழி பெயல் காலைச் செல வரை காணாக் கடல்தலைக் கூட