266
தி. அன்பொடு புணர்ந்த ஐந்திணை - மருதம்
நில வரை அல்லல் நிழத்த விரிந்த பலவுறு போர்வைப் பரு மணல் மூஉய், வரி அரி ஆணு முகிழ் விரி சினைய மாந் தீம் தளிரொடு வாழையிலை மயக்கி ஆய்ந்து அளவா ஒசை அறையூஉப் பறை அறையப் போந்தது வையைப் புனல். புனல் மண்டி ஆடல் புரிவான் சனம் மண்டித் தாளித நொய்ந் நூல் சரணத்தர் மேகலை ஏணிப்படுகால் இறுகிறுகத் தாள் இடீஇ நெய்த்தோர் நிற அரக்கின் நீரெக்கியாவையும் முத்து நீர்ச் சாந்த அடைந்த மூஉய்த் தத்திப் புக அரும் பொங்குஉளைப் புள் இயல் மாவும், மிக வரினும் மீது இனிய வேழப் பிணவும், அகவரும் பாண்டியும் அத்திரியும், ஆய் மாச் சகடரும் தண்டு ஆர் சிவிகையும், பண்ணி வகை வகை ஊழ் ஊழ் கதழ்பு மூழ்த்து ஏறி - முதியர் இளையர் முகைப் பருவத்தர் வதி மண வம்பு அலர் வாய் அவிழ்ந்தான்னார் இரு திற மாந்தரும் இன்னினியோரும், விரவு நரையோரும், வெறு நரையோரும், பதிவத மாதர் பரத்தையர் பாங்கர் அதிர் குரல் வித்தகர் ஆக்கிய தாள விதி கூட்டிய இய மென் நடை போலப் பதி எதிர் சென்று உரூஉச் கரை நண்ணி - நீர் அணி காண்போர் நிரை மாடம் ஊர்குவோர், வேர் அணி நிற்போர் பெரும் பூசல் தாக்குவோர், மா மலி ஊர்வோர் வயப் பிடி உந்துவோர், வீ மலி கான் யாற்றின் துருத்தி குறுகித் தாம் வீழ்வார் ஆகம் தழுவுவோர், தழுவு எதிராது யாமக் குறை ஊடல் இன் நசைத் தேன் நுகர்வோர், காமக் கணிச்சியால் கையறவு வட்டித்துச் சேமத் திரை வீழ்த்துச் சென்று அமளி சேர்குவோர் தாம் வேண்டு காதற் கணவர் எதிர்ப்படப்