பக்கம்:அன்பொடு புணர்ந்த ஐந்திணை (மருதம்).pdf/269

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

268

தி. அன்பொடு புணர்ந்த ஐந்தினை - மருதம்

கரப்பார் களி மதரும் போன்ம். கள்ளோடு காமம் கலந்து கரை வாங்கும் வெள்ளம் தரும் இப் புனல். புனல் பொருது மெலிந்தார் திமில் விடக், கனல் பொருத அகிலின் ஆவி கா எழ, நகில் முகடு மெழுகிய அளறு மடை திறந்து, திகை முழுது கமழ முகில் அகடு கழி மதியின் உறை கழி வள்ளத்து உறு நறவு வாக்குநர் அரவு செறி உவவு மதியென அங்கையில் தாங்கி, ஏறி மகர வலயம் அணி திகழ் நுதலியர் மதி உள் அரமகளென ஆம்பல் வாய் மடுப்ப மீப்பால் வெண் துகில் போர்க்குநர் பூப் பால் வெண் துகில் சூழ்ப்பக் குழல் முறுக்குநர் - செங் குங்குமச் செழுஞ் சேறு பங்கம் செய் அகில் பல பளிதம் மறுகுபட அறை புரை அறு குழவியின் அவி அமர் அழலென அரைக்குநர் நத்தொடு நள்ளி நடை இறவு வய வாளை வித்தி அலையில் விளைக பொலிக என்பார்.

இல்லது நோக்கி இனிவரவு கூறாமுன் நல்லது வெஃகி வினை செய்வார். மண் ஆர் மணியின் வணர் குரல் வண்டு ஆர்ப்ப தண் அம் துவர் பல ஊட்டிச் சலம் குடைவார் - எண்ணெய் கழல இழை துகள் பிசைவார் - மாலையும் சாந்தும் மதமும் இழைகளும் கோலம் கொள நீர்க்குக் கூட்டுவார் - அப் புனல் உண்ணா நறவினை ஊட்டுவார் ஒண் தொடியார், வண்ணம் தெளிர முகமும் வளர் முலைக் கண்ணும் கழியச் சிவந்தன; அன்ன வகை ஆட்டு அயர்ந்து அரி படும் ஐ விரை மாண் பகழி அரம் தின் வாய் போன்ம் போன்ம் போன்ம் பின்னும் மலர்க் கண் புனல்.