தொகை - வகை - உரை : த. கோவேந்தன்
269
தண்டித் தண்டின் தாய்ச் செல்வாரும், கண்டல் தண் தாது திரை நுரை தூவாரும், வெய்ய திமிலின் விரை புனலோடு ஒய்வாரும், மெய்யது உழவின் எதிர் புனல் மாறு ஆடிப் பைய விளையாடுவாரும், மென் பாவையர் செய்த பூஞ் சிற்றடிசில் இட்டு உண்ண ஏற்பார் - இடுவார் மறுப்பார் சிறுகு இடையார் பந்தம் கழங்கும் பல களவு கொண்டு ஓடி, அம் தண் கரை நின்று பாய்வாராய் மைந்தர் ஒளிறு இலங்கு எஃகொடு வாள் மாறு உழக்கி களிறு போர் உற்ற களம்போல, நாளும் தெளிவு இன்று தீம் நீர்ப் புனல். மதி மாலை மால் இருள் கால் சீப்பக் கூடல் வதி மாலை மாறும் தொழிலான் புது மாலை நாள் அணி நீக்கி நகை மாலைப் பூ வேய்ந்து தோள் அணி தோடு சுடர் இழை நித்திலம் பாடுவார் பாடல் பரவல் பழிச்சுதல் ஆடுவார் ஆடல் அமர்ந்த சீர்ப் பாணி நல்ல கமழ் தேன் அளி வழக்கம் எல்லாமும் பண் தொடர் வண்டு பரிய எதிர் வந்து ஊதத் கொண்டிய வண்டு கதுப்பின் குரல் ஊதத் தென் திசை நோக்கித் திரிதர்வாய் மண்டு கால் சார்வா நளிர் மலைப் பூங்கொடித் தங்குபு உகக்கும் பனி வளர் ஆவியும் போன்ம் மணி மாடத்து உள் நின்று தூய பனிநீருடன் கலந்து கால் திரிய ஆர்க்கும் புகை. இலம்படு புலவர் ஏற்ற கைளுெமரப் பொலம் சொரி வழுதியின் புனல் இறை பரப்பிச் செய்யில் பொலம் பரப்பும் செய் வினை ஒயற்க வருந்தாது வரும் புனல் விருந்து அயர் கூடல் அருங் கறை அறை இசை வயிரியர் உரிமை ஒருங்கு அமர் ஆயமொடு ஏத்தினர் தொழவே.
- கரும்பிள்ளைப் பூதனார் பரி பா. 10