பக்கம்:அன்பொடு புணர்ந்த ஐந்திணை (மருதம்).pdf/272

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தொகை - வகை - உரை : த. கோவேந்தன்

271


மகளிரும், இவர்க்குத் தோழியரான சிலரும், இசைப் புலமை யில் வல்ல புலவரால் ஆக்கப்பட்ட தாள விதியால் கூட்டப் பட்ட ஒலிக்கும் குரலையுடைய பல்வேறு இசைக் கருவி களின் இசையும் மெல்லிய நடையில் சென்றாற் போல் ஊரிலே வாழும் பிற மக்களுடன் கூடி ஆற்றின் எதிரே மெல்லப் போய்ப் பெரிய கடையை அடைந்தனர்.

அங்ஙனம் வந்தவருள் சிலர் அந்த வையை ஆற்றில் பெருகி ஓடி வரும் புதுநீரின் அழகைக் கண்டு நின்றனர். சிலர் வரிசையில் உள்ள நீரணி மாடம் என்னும் ஒடங்களில் ஏறி அவற்றைச் செலுத்தினர். சிலர் நீரில் ஆடவருடன் செய்யும் போருக்கு அணிவகுத்து நின்றனர். சிலர் அப் பெரிய நீராடல் போரில் தூசிப்படையாகச் சென்று தாக்கினர். சிலர் குதிரை களில் ஏறி அவற்றை நீருள் செலுத்தினர். சிலர் வலிய பெண் பானைகளின் மீது ஏறி அவற்றை நீருள் செலுத்தினர். சிலர் குதிரைக் கூட்டத்தில் ஏறி அவற்றைப் புனலுள் செலுத்தினர். மற்றும் சிலர் நறுமணப் பூக்கள் மிகுந்த ஆற்றிடைக் குறையை அடைந்து அங்குத் தம்மால் விரும்பப் பட்ட தம் தலைவர் தம் உடலைத் தழுவ அதனை ஏற்றுக் கொள்ளாது, முதல் நாள் இரவில் ஊடல் கொண்டிட, அந்த ஊடல் குறையாக நின்றதால் அதையே தொடர்ந்து ஊடி, அதனால் விளையும் இனிய விருப்பமான தேனைத் துய்த்தனர். மற்றும் சிலர் தாங்கள் ஊடியிருந்தும் காமம் என்ற கோடரி தம் நிறை என்னும் கதவை உடைத்ததால் மேலும் ஊடல் கொள்வதற்கு வன்மை அற்றவராய்த் தம் ஊடலை அகற்றி விட்டுத் தங்கள் கணவரை எதிர் கொண்டு காவலாகிய திரையை இறக்கி விட்டு உட்சென்று அங்குப் படுக்கையில் கிடந்தனர்.

சூடுதற்குரிய மலரின் மேம்பாட்டை விரும்பி அதில் வந்து பொருந்தும் வண்டினைப் போல், மூவகைப் பருவத்துப் பெண்கள் எல்லாம் தாம் விரும்பும் காதலையுடைய கணவர் தம்மை விரும்பி வந்து எதிர் சென்று புணரும் பொருட்டுத் தமக்குக் காவலாக இருந்த பாட்டியரிடமிருந்து தப்பி, அவர் தடுப்பதையும் கடந்து மீறிச் சென்றனர். தம்மால் விரும்பப் பட்ட துறைமுகப்பட்டினத்தை அடைந்து அங்கிருந்து மீண்டும் கரையை அடையும் தாம் இன்பம் அடைவதற்குக்