பக்கம்:அன்பொடு புணர்ந்த ஐந்திணை (மருதம்).pdf/273

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

272

அன்பொடு புணர்ந்த ஐந்திணை - மருதம்


காரணமான மரக்கல வருகையை விரும்பி எதிர்கொள்ளும் வணிகரைப் போன்று, அம் மகளிர் வையை ஆற்றின் நீரை எதிர் கொள்வதற்கு இடமானது மதுரை.

அதில் அழகிய நிலைகளையுடைய மாடம். அதன் அண்மையில் நின்ற ஒரு வலிய ஆண் யானை, அது தனக்குப் பக்கத்தில் உள்ள இளமையுடைய பெண் யானையைக் கண்டு காமத்தால் மயக்கம் அடைந்தது. அது தன் மீது இருந்த பாகன் செலுத்தவும் செல்லாது நின்றது. நிற்ப, அந்த இளமையுடைய பெண் யானையும் அந்த ஆண் யானை மீது தன் மனம் மயங்கி நின்றது. தன் மீது இருந்த அன்னப் பறவையை ஒத்த மகளுடன் தன் நடை சுருங்கி அந்த யானை நின்ற இடத்தில் போய் அங்குள்ள அழகிய புலி மாடத்தில் பண்ணி வைத்த பாயும் நிலையில் உள்ள வேங்கையின் வடிவத்தைக் கண்டது. அவ்வளவில் அதனை உண்மையான வேங்கை என்றும், அப் புலி தன் காதல் யானை மீது பாயும் என்றும் எண்ணி முகிலைப் போன்ற அந்தப் பெண் யானை, தன் மீது அமர்ந்திருந்த மடப்பம் உடைய மகளிர் நடுங்கும் படி பாகர் செய்யும் தொழிலை ஏற்றுக் கொள்ளாமல் கட்டுக் கடங்காமல் நின்றது.

அவ்வாறு பெண் யானை சிதைந்து நின்றமை பொறுக் காமல் பிளிறுகின்ற மதக் களிப்பையுடைய அந்த ஆண் யானை, வளைந்த அங்குசத்துக்கு அடங்காமல் போய்ச் சிதையும் அளவில், அதன் மீது இருந்த பாகுத் தொழில் வல்ல பாகர், இடி போன்ற அதன் முழக்கம் ஒழியும்படி அதைப் புலி மாடத்தினின்று நீக்கி, அந்தப் பெண் யானை சிதையாதபடி அதை அணைவித்து அப் பிடியின் மேல் இருந்த மங்கையரின் நடுக்கத்தைக் களைதல், பாயும் கயிறும் மரக் கூட்டமும் கெட்டொழியக் காற்றால் அலைப்புண்டு ஒடும்படியான நாவாயைப் பாயினால் சீர்திருத்தி அதன் உள்ளே இருப்பவர் நடுக்கத்தைப் போக்கும் திக்கினை அறிந்து செலுத்தவல்ல மீகாமனின் செயலை ஒத்ததாகும்.

பருத்த தண்டை உடைய யாழ் இசையும் கண்டத்துப் பாடலும் ஆடலும் என்பன நிகழ, அவை ஆடவர் மைந்தரின் மனத் திண்மையை அழித்தன. அதனால் அழிந்த நெஞ்சமான