பக்கம்:அன்பொடு புணர்ந்த ஐந்திணை (மருதம்).pdf/274

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தொகை - வகை - உரை : த. கோவேந்தன்

273


அரனத்தையுடைய அவர்கள் ஊடலில் வெற்றி அடைய வேண்டும் என்ற காரணத்தினால் ஒருவரை ஒருவர் முற்பட வேண்டும் என எண்ணாது நாணிக் கூடாமல் உள்ளம் துடித்து நின்றனர். தமக்குள் பகை கொண்டு எழுந்த மன்ன வரின் படைகள் இரண்டும் தங்களுக்குள் போர் செய்து வருந்தி நின்றன. அப் போரைக் கைவிட்டுத் தம்முள் உடம் பாடு பெற்றுப் போவதற்கு மனம் கொண்டிருந்தும் உலகத் தில் உள்ள பல்வேறு மாந்தரிடையேயும் இம் மன்னன் படை முன்னால் உடம்பட்டுப் போனது என்று எழுகின்ற சொல்லுக்கு அஞ்சிப் பின்னும் போர் செய்யும் துன்புத்துடன் நின்ற செயலைப் போன்ற தாகும் இது.

மனத்தில் காமம் மிகப்பெற்று எழ, அதனால் தம் கண்களில் அக் காமக் களிப்பு வெளியார்க்குப் புலப்படும்படி எழ, அதைக் கண்டு ஊரார் அலர் தூற்றுவரே என்ற அச்சம் கொண்டு, அக் காமத்தைப் பிறர் அறியாமல் மறைப்பர். அவர் தம் நிலைமை, கள் உண்டவர் தம்மிடம் அந்தக் கள்ளின் களிப்புப் புறத்தார்க்குப் புலப்படுமாறு வெளிப்படத், தம் மனம் துன்பம் அடையுமாறு ஊரார் அலர் தூற்றுவதற்கு அஞ்சி, அது பிறர் அறியாமல் முயலும் முயற்சியினால், அவர்தம் களிப்பதைத் தாமே எல்லாரும் அறியும்படி தாமே பரப்பிப் பின்பு, உலகம் பழி தூற்றுவதைக் கேட்டுத் தமக்குள் நடுங்கி, மேலும் கள்ளால் உண்டான களிப்பைப் புறத்தார்க்குத் தெரியாத வண்ணம் காத்து மறைப்பவரின் நிலைமையைப் போன்றதாகும்.

இப்படிக் கள்ளையும் காமத்தையும் பொருந்துதலால் அளவற்ற இன்ப வெள்ளத்தைத் தந்தது. வையை ஆற்றில் பெருகிய இந்தப் புதிய நீர், ஆளை எறிந்து கொல்லும் தன்மை யுடைய மகர மீனின் வடிவுடையதாய்ச் செய்யப்பட்ட மகர வலயம் என்ற தலைக்கோலத்தால் அழகு மேலும் விளங்கும் நெற்றியையுடைய மங்கையர் இந்த வையையின் புதிய நீரில் ஆடி இளைத்தனர். பின்பு தம் புணைகளைக் கை விட்டுக் கரையேறினர். அவ்வளவில் தம்மால் உண்டாக்கப் பட்ட தீயால் சுடப்பட்ட அகிலினின்று எழுந்த நறுமணப் புகை அக் கரையகத்திருந்த சோலையில் எல்லாம் மணம் கமழு